இந்தோனேசியா நிலநடுக்கம்..! பலி எண்ணிக்கை 347ஆக உயர்வுSponsoredஇந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 347 பேராக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்போக் தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் 7 ரிக்டர் அளவாக பதிவானது.  இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல விநாடிகள் நீடித்தது. அந்த நிலநடுக்கத்தால், பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள், வீடுகள் இடிந்தன. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 347 ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,400-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 1,65,000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored