`காதலனின் ஆவி இருப்பதாக நம்பவைத்தேன்'- 15 ஆண்டுகளாக சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்13 வயதில் காணாமல் போனதாக பெற்றோரால் தேடப்பட்டுவந்த சிறுமியை 28 வயதில் போலீஸார் மீட்டுள்ளனர். இதில், அதிர்ச்சி என்னவென்றால், அந்தச் சிறுமி 15 ஆண்டுகளாக மந்திரவாதி ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருந்ததுதான். 

Sponsored


இந்தோனேசியாவில், மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதி குகையில், 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை போலீஸார் மீட்டுள்ளனர். அந்தப் பெண்ணைக் காணவில்லை என்று அவரின் பெற்றோர் கடந்த 2003-ல் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துள்ள போலீஸார், `மந்திரவாதி ஒருவரால் கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்' என்று தெரிவித்துள்ளனர். 

Sponsored


இந்த விவகாரம்குறித்து விவரிக்கையில், `தன் மகன் மற்றும் மருமகளுடன் ஜகர்த்தா என்ற இடத்தில் வசித்துவருகிறார் 83 வயதான முதியவர். இவர், பேய் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு, தன்னை மந்திரவாதியாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். இவரது, மருமகளின் சகோதரி, கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் காணாமல் போய்விட்டார். முன்னதாக,  கடந்த 2003-ல் 13 வயதுடைய சிறுமியை சிகிச்சைக்காக அந்த மந்திரவாதியிடம் விட்டுச் சென்றுள்ளனர் பெற்றோர். பல நாள்களாகியும் அந்தச் சிறுமி வீடு திரும்பாததால், அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது, 'உங்கள் பெண்ணுக்கு ஜகர்த்தா துறைமுகப் பகுதியில் வேலை கிடைத்ததால் இங்கிருந்து சென்றுவிட்டார்' என்று சந்தேகம் ஏற்படாதவாறு கூறிவிட்டார். அதன்பிறகு, அச்சிறுமியைக் காணவில்லை எனச் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

Sponsored


இந்நிலையில், தற்போது அந்தச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். `தனது வீட்டின் அருகில் உள்ள குகை இடுக்கில் தன் சகோதரிபோல ஒரு பெண் இருக்கிறார்' என்று காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட சிறுமியின் சகோதரி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சிறுமி மந்திரவாதியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது' என போலீஸார் கூறினர். மந்திரவாதியைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், `2003-ல் அந்தச் சிறுமியை வீட்டின் அருகிலிருந்த குகையில் அடைத்துவைத்தேன். அவளிடம், ஆண் நண்பன் இருந்ததாக நம்பவைத்தேன். அவனது ஆவி என்னுள் இருப்பதாகவும் கூறினேன். இதை அச்சிறுமி நம்பியதால், அவளிடம் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுவந்தேன்' என்று கூறினார். `தன் சகோதரியை மாமனாரே 15 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்தது அதிர்ச்சியாக உள்ளது' எனப் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி கூறியுள்ளார். இருப்பினும், சகோதரிக்கும் விவகாரத்தில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். Trending Articles

Sponsored