தாய்லாந்துக் குகையில் சிக்கிய 4 சிறுவர்களுக்குக் கிடைத்த எதிர்பாராத அதிர்ஷ்டம்!தாய்லாந்துக் குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவர்களில், குடியுரிமை இல்லாதவர்களுக்கு அந்நாட்டு அரசு நேற்று குடியுரிமை வழங்கியுள்ளது. 

Sponsored


photocredits - 9News

Sponsored


ஜூன் 23-ம் தேதி, தாய்லாந்தில் உள்ள தி தம் லுஅங் என்ற குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. தற்போதெல்லாம் குகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இந்தச் சிறுவர்கள்தான். தி தம் லுஅங் என்ற குகைக்குள் தன் பயிற்சியாளருடன் சென்ற சிறுவர்கள், அன்று பெய்த மழையில் மாட்டிக்கொண்டனர். 18 நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டத்துக்குப் பிறகு, உயிருடன் அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த மீட்புப்பணிகள், உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சிறுவர்கள் குகையில் சிக்கியதும், அவர்களுக்காக நடைபெற்ற மீட்புப்பணிகளும் இந்த ஆண்டில் நடைபெற்ற மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்று. சர்வதேச அளவில் மிகவும் திறமைவாய்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படை வீரர்கள் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வெற்றிபெற்றனர். 13 பேரை மீட்க 1000 வீரர்கள் பணிகளில் ஈட்டுபட்டிருந்தனர்.

Sponsored


 அதற்குப் பிறகு, மீட்புப்படை வீரர்களும் குகையில் சிக்கிய சிறுவர்களும் உலகப் புகழ் ஹீரோக்களானார்கள். மீட்கப்பட்ட சிறுவர்களில் நான்கு பேர் தாய்லாந்து குடியுரிமை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள். முன்னதாக, அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தாய்லாந்து அரசு ஆலோசித்துவந்தது. பின்பு, குடியுரிமை இல்லாதவர்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, நேற்று அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுவர்கள் குகையில் இருந்து மீட்கப்பட்ட அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களின் சொந்த மாகாணமான மே சாய்யின் தலைமை அதிகாரி சோம்சக், சிறுவர்களுக்குக் குடியுரிமையை வழங்கினார். முன்னதாக, அந்தச் சிறுவர்களிடம் இருந்த தேசிய அடையாள அட்டையை ஒப்படைத்துவிட்டு, அனைவரும் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி, அம்மாகாணத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், ‘காட்டுப் பன்றிகள் கூட்டம் பெருகும்’ (Wildpoars) ‘தாய்லாந்துக் குடியுரிமை கிடைத்தது’ என்ற வாசகங்களுடன் ஒளிபரப்பப்பட்டது.Trending Articles

Sponsored