ரூபாய் நோட்டுகளில் எழுதினால் சிறை! - நேபாளத்தில் அமலாகிறது புதிய சட்டம்ரூபாய் நோட்டை சேதப்படுத்துபவர்கள் மற்றும் அதன்மீது எழுதுபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான புதிய சட்டம், நேபாளத்தில் வரும் 17-ம் தேதி முதல் அமலாகிறது. 

Sponsored


இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, நேபாளத்தின் தேசிய வங்கியான நேபாள் ராஷ்ட்ர வங்கி (NRB), அந்நாட்டின் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 2017-ன்படி, ரூபாய் நோட்டுகளைக் கிழிப்பது, சேதப்படுத்துவது மற்றும் அதன்மீது எழுதுபவர்களுக்கு, அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையுடன், 5,000 நேபாள ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, என்.ஆர்.பி வங்கி வெளியிட்டுள்ள மற்றொரு சுற்றறிக்கையில், 'பொதுமக்களுக்கு இந்தப் புதிய சட்டம்குறித்து விழிப்பு உணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்துப் பேசிய என்.ஆர்.பி வங்கியின் ரூபாய் நோட்டு மேலாண்மைத் துறையின் தலைவர் லஷ்மி பிரபன்னா நிரௌலா, ``இந்தப் புதிய சட்டம் மூலம் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், சேதம் இல்லாமலும் இருக்கும். இதன்மூலம் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை உருவாக்குவதற்காகச் செலவிடப்படும் தொகை குறையும்’’என்று தெரிவித்திருக்கிறார். சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, புழக்கத்தில் விடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்கள் இருந்துவரும் நிலையில், ரூபாய் நோட்டுகளில் எழுதுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட முதல் சட்டம் இதுவே'' என்று கூறப்படுகிறது.  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored