`கண் அசந்தால் வைரத்தையும் தூக்குவோம்'- கட்டெறும்பு நடத்திய சதுரங்க ஆட்டம்! #ShockingVideoSponsoredஎறும்பு, அளவில் சிறியதுதான். கொஞ்சம் கண் அசந்தால், வைரத்தையும் தூக்கிச் சென்றுவிடும். நம்ப முடியவில்லையா... 


 

யூடியூபில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில்தான் அந்த அதிசயத்தைப் பார்க்க முடிந்தது. கட்டெறும்பு ஒன்று, நகைக்கடையில் இருந்து வைரக் கல்லை  இழுத்துக்கொண்டு செல்கிறது. அந்த வீடியோ, எந்த நாட்டில் பதிவானது... யார் எடுத்தது? என்பது போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அந்த எறும்பு, உணவுப் பொருள் என்று நினைத்து வைர கல்லை இழுத்து செல்கிறது.

வீடியோவில், பின்னணியில் சிலர் இந்தியில் பேசிக்கொள்கின்றனர். வைரக் கற்களை மொத்த வியாபாரம் செய்யும் இடம் அது என்றும் தெரிகிறது. இந்தியாவில், குஜராத்தின் சூரத் நகரில்தான் வைர வர்த்தகம் அதிக அளவில் நடக்கும். எனவே, இந்த வீடியோ அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.  இந்த வீடியோவைப் பார்க்கும்போது இன்னொரு சந்தேகமும் எழுகிறது. தன் எடையைவிட அதிக எடையுடைய பொருளை எறும்பு எப்படித் தூக்கிச்செல்கிறது? இணையத்தில் இந்த பதில் தேடியதில்.. `எறும்புகள், தன் எடையைவிட 10 மடங்கு எடையுள்ள பொருளை சுமக்கும் திறன் பெற்றவை’ என்கிறது ’National Wildlife Federation’. இனி, வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருள்களை எறும்பு கண்ணுக்குப் படாமல் வைப்பது நல்லது!  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored