`கேரளாவுக்குச் செல்ல வேண்டாம்...!' - மக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் அமெரிக்கா 



Sponsored



கேரளாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மக்கள், தங்களின் பயணங்களை ரத்து செய்து விடுங்கள் என அமெரிக்க அரசாங்கம், அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. 

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடம் கேரளா. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், உள்நாட்டுச் சுற்றுலா வாசிகளைக் கவரும் இடமும் கேரளாதான். தற்போது, அங்கு தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பெய்து வரும் கன மழையால், மாநிலத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் விரைவாக நிரம்பி வருகின்றன. மாநிலம் முழுவதிலும் உள்ள 22 அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், இடுக்கி அணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியாறு ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மலப்புரம், இடுக்கி, பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Sponsored


கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் இதுவரையிலும், 22 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேரளாவுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள், அதைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது அமெரிக்க அரசு. இதுகுறித்து அந்நாட்டு அரசாங்கம் சார்பில், `தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கேரளாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மக்கள், தங்களின் பயணங்களை ரத்து செய்து விடுங்கள்' எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Sponsored




Trending Articles

Sponsored