பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 18-ல் பதவியேற்கும் இம்ரான் கான்! இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு



Sponsored



பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பதவியேற்க இருப்பதாக தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி அறிவித்திருக்கிறது. 

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி, சிறிய கட்சிகளுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பதவியேற்க இருக்கிறார். ஆனால், பல்வேறு சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் காரணமாகப் பதவியேற்பு விழா குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பதவியேற்க இருப்பதாக தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலைப் பாகிஸ்தான் செனட்டர் ஃபைசல் ஜாவேத், ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

Sponsored


புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை வரும் 13-ம் தேதி கூட்ட இருப்பதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் மம்னூன் ஹூசைன் அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில், பிரதமர் பதவியேற்பு குறித்து தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இம்ரான் கானின் பதவியேற்பு விழாவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ், நவ்ஜோத்சிங் சித்து, சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரதமர் பதவியேற்பு விழாவுக்காகப் பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் தனது ஸ்காட்லாந்து சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவரான மம்னூன் ஹூசைன் வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். 
 

Sponsored




Trending Articles

Sponsored