கடத்தப்பட்ட அலாஸ்கா விமானம் - புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய பரிதாபம்அமெரிக்காவில் சியாட்டில் - டகோமா விமான நிலையத்திலிருந்து பணியாளர் ஒருவர் இயக்கிய அலாஸ்கா விமானம் வெடித்துச் சிதறியுள்ளது. 

Sponsored


அமெரிக்காவின் சியாட்டில் - டகோமா விமான நிலையத்திலிருந்து எந்த வித அறிவிப்பும் இல்லாமல் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வெள்ளியன்று இரவு இயக்கப்பட்டுள்ளது. (இந்திய நேரப்படி இன்று காலை) இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சியாட்டில் என்ற இடத்தில் காட்டில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. 

Sponsored


இது குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், “ஹாரிஸோன் ஏர் கியூ 400 என்ற விமானம் எந்தவித அங்கீகாரமும் இன்றி சியாட்டில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. பியர்ஸ் கவுண்டியில் உள்ள கேட்ரான் தீவுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஒரே ஒருவர் மட்டும் விமானத்தை இயக்கியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளனர். 

Sponsored


பின்னர், இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அலாஸ்கா ஏர்லைன்ஸில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் எந்த அங்கீகாரமும் இன்றி விமானத்தை இயக்கியுள்ளதாகவும், அவருக்கு விமானம் சரியாக இயக்கத் தெரியாததால் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விமானத்தை இயக்கிய ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகவும், இது கடத்தப்படுவதற்காக இயக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானம் எரிந்துகொண்டு இருப்பதாகவும் தீ வேறு இடங்களுக்குப் பரவாமல் தடுக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.Trending Articles

Sponsored