மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் அஞ்சலி...! -யார் இந்த வி.எஸ்.நைபால்Sponsoredவித்தியதர் சூரஜ்பிரசாத் நைபால் சுருக்கமாக வி.எஸ்.நைபால். தெற்கு கரீபியன் பகுதியில் உள்ள வெனிசுலா கடலோரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான டிரினாட் நகரில் கடந்த 1932-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி பிறந்தார். இவரின் தந்தை ஒரு பத்திரிக்கையாளர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, வி.எஸ்.நைபாலின் குடும்பத்தினர் டிரினாட் தீவில் குடியேறி விட்டனர். சிறுவயதிலே எழுத்தில் அலாதி பிரியம் கொண்டவராக நைபால் திகழ்ந்துள்ளார். ஸ்பெயின் போர்ட்டில் உள்ள ராணி ராயல் கல்லூரியில் பயின்ற இவர், டிரினாட் அரசாங்கத்தின் நிதி உதவியால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். 

Sponsored


இதன்பின், எழுத்தாளராகத் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நைபால், நாவலாசிரியர், பயண எழுத்தாளர், கட்டுரையாளர் எனத் தன்னை பன்முகத்தன்மையுடன் அடையாளம் படுத்திக் கொண்டார். இந்தோனேசியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நைபால் பல புகழ்பெற்ற பயண நூல்கள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். அதே வேளையில், இவரது புத்தகங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன . `An area of darkness' என்ற புத்தகம் எதிர்மறை சிந்தனையை தூண்டுவதாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

Sponsored


இதனைத் தொடர்ந்து, இந்தியாவை மையமாக வைத்து A wounded civilization, A House for Mr Biswas உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது எழுத்துகளால், பல கோடி வாசகர்களை தன்வசம் ஈர்த்துக் கொண்ட வி.எஸ்.நைபால், 2001-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். முன்னதாக, 1971-ம் ஆண்டில் In a Free State புத்தகத்துக்காக புக்கர் விருது பெற்றார். 1981-ம் ஆண்டு சர் பட்டமும் பெற்றார்.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக தனது 85 வயதில் இந்திய நேரப்படி நேற்று இரவு லண்டனில் காலமானார். இவரது மறைவு, இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு என லண்டன் ஊடகங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டதாவது, `வி.எஸ்.நைபாலின் மறைவு உலக இலக்கியத்தின் பேர் இழப்பு. அவரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். Trending Articles

Sponsored