எங்கள் மொழிமீது இந்திய மொழிகளின் தாக்கம் உள்ளது..! ஜப்பானிய கவுன்சில் ஜெனரல் பெருமிதம்Sponsored'ஜப்பானில் உள்ள ஒரு நகரத்துக்கு, லஷ்மி கோயில் என்று பொருள் வரும் பெயர் உள்ளது' என்று ஜப்பான் கவுன்சில் ஜெனரல் டகாயுகி கிட்டாகாவா தெரிவித்துள்ளார். 


கோப்புப்படம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள கல்லூரியில், ஜப்பான் கவுன்சில் ஜெனல் டகாயுகி கிட்டாகாவா கலந்துகொண்டு பேசினார். அவர், இந்தியக் கலாசாரம் மற்றும் ஜப்பான் கலாசாரத்துக்கு இடையிலான ஒற்றுமைகுறித்துப் பேசினார். அப்போது, 'ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகிலுள்ள நகரம் கிசியோஜி. கிசியோஜி என்றால் லஷ்மி கோயில் என்று பொருள். இந்தியாவும் ஜப்பானும் வேறு வேறு பகுதிகள். ஆனால், அதனுடைய மக்கள் வேறு வேறு அல்ல. ஜப்பானிலுள்ள கோயில்கள் பலவும், இந்துக் கடவுள்களை ஒத்திருப்பதிலிருந்து அது தெளிவாகிறது.

Sponsored


பல வருடங்களாக நாங்கள் இந்துக் கடவுள்களை வணங்கிவருகிறோம். கலாசாரம் மட்டுமல்ல. ஜப்பான் மொழியின் மீதும் இந்திய மொழிகளின் தாக்கம் உள்ளது. ஜப்பான் மொழியின் பல வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை. ஜப்பான் உணவான சுஷி, அரிசி மற்றும் வினிகரிலிருந்து தயாராகிறது. சுஷி, ஷாரியுடன் தொடர்புடையது. இது, சமஸ்கிருத வார்த்தை ஷாலியிலிருந்து வந்தது' என்று தெரிவித்தார்.

Sponsored


ஜப்பானிய ஆய்வாளரின் கூற்றுப்படி, ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஜப்பானிய வார்த்தைகள் சமஸ்கிருதம் மற்றும் தமிழிலிருந்து உருவானவை என்று கூறப்படுகிறது. Trending Articles

Sponsored