வெள்ளத்துக்கு நடுவே நடந்த மறக்கமுடியாத திருமணம் - வைரலாகும் வீடியோ



பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் சூழ்ந்துள்ள வெள்ளநீரில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Sponsored


ஒவ்வொருவரின் வாழ்நாளிலும் திருமணம் என்பது மறக்கமுடியாத ஒரு நாளாக அமையும். எத்தனை வருடங்கள் சென்றாலும் திருமண நாளன்று நடைபெற்ற இனிய தருணங்கள் நீங்காமல் என்றும் மனத்தில் நிலைத்திருக்கும். திருமணமே ஒரு மறக்கமுடியாத நாள். அன்று மேலும் சிறப்பாகவோ அல்லது வித்தியாசமான முறையில் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால், அது திருமணமான தம்பதி மட்டுமல்லாது அங்குள்ள அனைவர் மனதிலும் இடம்பிடித்துவிடும். அப்படி ஒரு திருமணம்தான் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது. 

Sponsored


தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாள்களாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறிப்போயுள்ளது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக குடில்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

Sponsored


இந்த நிலையில், பிலிப்பைன்ஸில் உள்ள புலாகன் என்ற மாகாணத்தில் ஜெஃபர்சன் மற்றும் ஜோபல் டி லாஸ் என்ற தம்பதி கடந்த சனிக்கிழமையன்று மழை வெள்ளத்துக்கு நடுவே திருமணம் செய்துகொண்டுள்ளனர். அங்குள்ள ஒரு தேவாலயத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பலத்த மழைக்குப் பிறகு தேவாலயம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதைச் சற்றும் பொருட்படுத்தாத அந்தத் தம்பதி, தங்கள் திருமணத்துக்கு இயற்கை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வெள்ள நீரில் நனைந்தபடியே குறித்த நாளில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



Trending Articles

Sponsored