விஷமான களைக்கொல்லி... விவசாயிக்கு 289 மில்லியன் டாலர் அபராதம் தரும் மான்சான்டோ!மான்சான்டோ என்பது அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண் ரசாயன மற்றும் உயிரித் தொழிநுட்ப நிறுவனம். இதன் தலைமை இடம் அமெரிக்காவின் மிசூரியில் உள்ளது. இந்நிறுவனம் 1970 களில் ரௌண்டு அப் (Round up) என்னும் களைக்கொல்லியை அறிமுகப்படுத்தியது. இந்தக் களைக்கொல்லியில் கிளைபாஸ்பேட் (Glyphosphate) என்னும் மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் உற்பத்தி செய்கிறது.

இந்நிறுவனம் மீது 2016 ம் ஆண்டு டுவைன் ஜான்சன் ஒரு வழக்கு தொடர்ந்தார். இவர் கலிபோர்னியாவில் பெனிசியா பகுதியில் உள்ள பள்ளியில் விவசாய நிலப் பராமரிப்பு வேலையாள் ஆகப் பணிபுரிந்துள்ளார். கடந்த 2014 ம் ஆண்டு இவர் வெள்ளை அணுக்களைப் பாதிக்கும் ``நான் ஹாட்ஜ்கின் லிம்ஃபோமா (Non-hodgkin lymphoma)" என்னும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதற்குக் காரணம் அவர் பணியின் போது அதிகமாகப் பயன்படுத்திய மான்சான்டோ நிறுவனத்தின் ரௌண்டு அப் மற்றும் ரேஞ்சர் போரோ ஆக இருக்கலாம் என சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்.

Sponsored


இந்நிறுவனத்தின் மீது இதேபோல் 5000 த்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஜான்சனின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் எல்லாத் தரப்பு வாதங்களையும் கேட்டது. இத்துறையின் வல்லுநர்களிடமும் விசாரித்தது. அதில் 2015 ம் ஆண்டு ``கிளைபாஸ்பேட்" புற்று நோயை உண்டாக்கும் பொருள்கள் இருக்கலாம் என உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Sponsored


Sponsored


PC: AP/Josh Edelson

பிராண்ட் விஸ்னர் என்பவர் ஜான்சனின் வழக்கறிஞர். இவர் புற்று நோயை உண்டாக்கும் பொருள் மான்சான்டோவின் களைக்கொல்லியில் இருப்பதைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்காதது தவறு என வாதிட்டார். ஆனால், மான்சான்டோ நிறுவனம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

நீதிமன்றம் வழக்கை விசாரித்த பின்,  மான்சான்டோ நிறுவனம் 39 மில்லியன் டாலர் இழப்பீடாவும் 250 மில்லியன் டாலர் மக்களை இந்தக் களைக்கொல்லியின் ஆபத்தைப் பற்றி எச்சரிக்காத குற்றத்துக்காகவும், மொத்தம் 289 மில்லியன் டாலர் ஜான்சனுக்குத் தர வேண்டும் எனத் தீர்ப்பளித்தது .

அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்காட் பேட்ரிஜ் தாங்கள் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் இத்தீர்ப்பு 800 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளையும் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அமெரிக்கச் சுகாதார ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்பின் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கியதாக்கவும் கூறினார்.

இத்தீர்ப்பைக் கேட்ட ஜான்சன் தன் வழக்கறிஞர் பிரண்ட் விஸ்னரை கட்டி அணைத்தார். பிரண்ட், ``நம் பக்கம் உண்மை இருக்கும் போது வெற்றி பெறுவது எளிது" என உற்சாகமாகக்  கூறினார்.

பல உலக நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் களைக்கொல்லி பயன்பாட்டில் உள்ளது. பிரெஞ்சு நாட்டுத் தலைவர் இம்மானுவல் மேக்கரோன் இந்தக் களைக்கொல்லியைத் தடை செய்ய முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. இந்தியாவிலும் ரௌண்டு அப் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவிலும் பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளால் பல உயிர்ச்சேதங்கள் நடைபெறுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. சென்ற ஆண்டு மகாராஷ்டிராவில் 35 க்கும் அதிகமான விவசாயிகள் இறந்தது, 450க்கும் அதிகமான பேர் மருத்துவமனையில் சேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இச்சம்பவம் நாம் மீண்டும் இயற்கை முறை விவசாயத்துக்கு மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது .Trending Articles

Sponsored