கடையில் கொல்லப்பட்டுக் கிடந்த இந்தியர்! அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்Sponsoredஅமெரிக்காவில், கடந்த சில மாதங்களாக இந்தியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. அதிலும், சீக்கியர்களை குறிவைத்துத் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வது தொடர்கதையாகிவிட்டது. 

அமெரிக்காவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். அங்கு, சீக்கியர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் என அனைத்துத் தரப்பு இந்திய மக்களும் வசித்துவருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக இந்தியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில், கலிபோர்னியாவில் கேயெஸ் மற்றும் ஃபூட்டே சாலை சந்திப்பில், சீக்கியர் ஒருவரை இரண்டு பேர் கொடூரமாகத் தாக்கினர். அப்போது, ``உங்களை நாங்கள் வரவேற்கவில்லை; உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள்'' என்று கூறி, அவர்மீது இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையாக எழுந்ததையடுத்து, இதில் தொடர்புடையவர்களை கலிபோர்னியா போலீஸார் கைதுசெய்தனர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள், மீண்டும் ஒரு சீக்கியர் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். 

Sponsored


Sponsored


Photo Credit -tweet/@SikhProf

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெஸ்சி மாகாணத்தில், கடந்த 6 வருடங்களாகப் பல்பொருள் அங்காடி  ஒன்றை நடத்திவந்தவர், டெர்லோக் சிங். இந்த நிலையில், டெர்லோக் சிங்கின் உறவினர் ஒருவர் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, மார்பில் கத்தியால் குத்தப்பட்டு  கடையின் உள்ளே டெர்லோக் சிங் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்துபோன அவர், போலீஸார் மற்றும் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். யார் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது, எதற்காகக் கொலைசெய்யப்பட்டார் போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. Trending Articles

Sponsored