ஐ.நா-வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனான் மறைவு!



ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான கோஃபி அனான், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

Sponsored


உடல்நலக் குறைவால் ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனான், இன்று அதிகாலை உயிரிழந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை அவரது குடும்பம் சமூக வலைதளமான ட்விட்டர் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கோஃபி அனானின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவரது குடும்பத்தினர் இட்டுள்ள பதிவில், ``ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான கோஃபி அனான், உடல்நலக் குறைவால் இன்று (ஆகஸ்ட் 18) மறைந்தார் என்பதை கனந்த இதயத்துடன் அவரது குடும்பம் மற்றும் கோஃபி அனான் அறக்கட்டளை சார்பாக அறிவிக்கிறோம். இறுதி நாள்களில் அனானின் மனைவி நானே மற்றும் அமா, கோஜோ மற்றும் நைனா ஆகிய அவரது வாரிசுகள் அவருடன் இருந்தனர். 

Sponsored


உலக அமைதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் கோஃபி அனான். ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தபோது, உலக அமைதி, நீடித்த வளர்ச்சி, மனித உரிமை ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தார். ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகியவுடன், அவரது பெயரில் தொடங்கப்பட்டுள்ள 'கோஃபி அனான் அறக்கட்டளை'யின் தலைவராக இருந்து, உலக அமைதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டார். மேலும், நெல்சன் மண்டேலா தொடங்கிய `தி எல்டர்ஸ்’ (The Elders) அறக்கட்டளையின் வாயிலாகவும் அவர் தனது பணிகளை மேற்கொண்டார். கானாவில் பிறந்த அவர், ஆப்பிரிக்காவின் வளர்ச்சிகுறித்து அக்கறைகொண்டிருந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

Sponsored




Trending Articles

Sponsored