`மூன்றாவது முறை இலங்கை அதிபர் ஆவேன்' - நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கும் மஹிந்த ராஜபக்சே!Sponsoredமூன்றாவது முறை அதிபர் ஆவேன் என்று நம்புகிறேன் என முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே. 2005-ம் ஆண்டு முதல் முறையாக இலங்கை அதிபரானார். தொடர்ந்து 2010 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக இலங்கை அதிபரானார். இலங்கையில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். இதற்கிடையே, 2010-ம் ஆண்டு இந்தச் சட்டத்தை மாற்றிய ராஜபக்சே மூன்றாவது முறையாக 2015-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், இந்த முறை அவருக்கு மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. அவர் தோல்வியடைந்ததை அடுத்து இலங்கையின் புதிய அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். அவர் பதவி ஏற்றதும், ராஜபக்சே கொண்டுவந்த சட்டத்தை மாற்றியமைத்தார்.

Sponsored


அதன்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் எனப் பழைய சட்டத்தை அமல்படுத்தினார். இந்த விவகாரம் முடிந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இலங்கை அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து முன்னாள் அதிபர் ராஜபக்சே அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, ``மூன்றாவது முறை அதிபர் ஆவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கில் எங்களுக்குச் சாதமாக தீர்ப்பு வரும். தீர்ப்பில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored