`நாங்கள் ஏற்கெனவே அதிகப்படியான ஊதியம் பெறுகிறோம்!’ - ஊதிய உயர்வை நிராகரித்த நியூசிலாந்து பிரதமர்Sponsoredநியூசிலாந்து நாட்டு எம்.பி-க்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 சதவிகித ஊதிய உயர்வுக்கு எதிராக மசோதா கொண்டுவருவதற்கு அந்நாட்டு பிரதமர் ஜேசின்டா அர்டெர்ன் முடிவெடுத்துள்ளார். 

நியூசிலாந்து நாட்டின் எம்.பி-க்களுக்கு 3 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிப்பதற்கு அந்நாட்டின் ஊதிய ஆணையம் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையின்படி, அந்நாட்டின் பிரதமர் ஜேசின்டா அர்டெர்னுக்கு 14,131 நியூசிலாந்து டாலர் அதிகமாகக் கிடைக்கும். அதேபோல, அவருடைய சகாக்களுக்கு 8,046 நியூசிலாந்து டாலர் அதிகமாகக் கிடைக்கும். சில எம்.பி-க்களுக்கு 4,456 நியூசிலாந்து டாலர் அதிகமாகக் கிடைக்கும். ஆனால், இந்த ஊதிய உயர்வு தேவையில்லை என்று கூறி, அதை நிறுத்தவதற்குச் சட்டம் கொண்டுவர அந்நாட்டு பிரதமர் ஜேசின்டா முடிவு செய்துள்ளார். அதற்கு எதிர்கட்சித் தலைவரும் ஆதரவு அளித்துள்ளார். ஏற்கெனவே எங்களுக்கு அதிகப்படியான ஊதியம் வழங்கப்படுகிறது என்று அந்நாட்டு பிரதமர் ஜேசின்டா அர்டெர்ன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக 2015-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஜான் கீயும், 3.5 சதவிகித ஊதிய உயர்வை, 1.5 சதவிகிதமாகக் குறைப்பதற்கு சட்டம் கொண்டு வந்தார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored