நிலாவில் ஐஸ்கட்டி... மனிதர்களைக் குடியமர்த்த திட்டமிடும் நாசா!Sponsoredகடந்த பத்தாண்டுகளுக்கு முன் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 1 விண்கலம் அனுப்பிய தகவல்களைக் கொண்டு சந்திரனில் ஐஸ்கட்டிகள் இருப்பது நாசாவால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

போதுமான அளவு ஐஸ்கட்டிகள் நிறைந்திருப்பதால் எதிர்காலத்தில் நிலவில் தண்ணீர் எளிதில் கிடைக்குமென நம்பப்படுகிறது. தண்ணீருக்கான ஆதாரம் இருக்கும் பட்சத்தில் நிலவில் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதும் வருங்காலங்களில் ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.

Sponsored


இந்த ஐஸ்கட்டிகள் தற்போது உருவானவை அல்ல; முன்பிருந்தே நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக NAS என்ற ஜர்னலில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. நிலவின் தென் துருவத்தில் ஐஸ்கட்டிகள் நிறைய, நெருக்கமாக நிறைந்திருப்பதாகவும், வடகோடியில் சற்று குறைவாகக் காணப்படுவதாகவும் கூறுகின்றனர் நாசாவினர். விஞ்ஞானிகள் நாசாவின் MOON MINERALOGY MAPPER M3 என்னும் கருவி கொண்டு ஆய்வு செய்ததில் நிலவில் தண்ணீர் மற்றும் ஐஸ்கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Sponsored


அதிகமான ஐஸ்கட்டிகள் நிலவிலுள்ள பள்ளங்களின் நிழலில் இருக்கிறது. அங்கே வெப்பநிலை - 156 ° செல்சியஸ் ஐ தாண்டாது. மேலும் நிலவின் சுழலும் அச்சு (ROTATION AXIS) சற்று சாய்வாக இருப்பதால் சூரிய ஒளியும் இதன் மேல் படராது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஐஸ்கட்டிகளைப் பற்றி போதுமான ஆராய்ச்சி எதிர்காலத்தில் நடத்துவதுதான் நாசாவின் எதிர்காலத் திட்டம். எல்லாம் சாத்தியம் ஆகும் பட்சத்தில் மனிதர்களை நிலாவில் குடியமர்த்தவும் திட்டம் உள்ளதாகவும் கூறினர் நாசாவினர்.Trending Articles

Sponsored