`மன்னித்துவிடுங்கள் சகோதரர்களே..' - தேவாலயத்தில் திருடியவரின் வைரல் கடிதம்!அமெரிக்காவில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருடச் சென்ற திருடன், அங்கிருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு, அதற்காக மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான். 

Sponsored


Photo Credit -@Hartford_NC

Sponsored


அமெரிக்கா கனெக்டிகட் நகரில் உள்ள Mt. Olive AME Zion தேவாலயத்தில், கடந்த 19-ம் தேதி ரூ.2.7 லட்சம் மதிப்பிலான ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்கள் திருடப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீஸார், தேவாலயத்தில் பதிவான சிசிடிவி காட்சியைத் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், `தேவாலயத்துக்குள் வரும் திருடன், அங்குள்ள மின்னணு சாதனங்களைத் திருடிச்செல்லும் முன்பாக, கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் செல்லும் காட்சி' பதிவாகியுள்ளது. 

Sponsored


இது தொடர்பாக, ஹார்ட்ஃபோர்ட் நியூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்தத் திருடன் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதில், என்னை மன்னித்துவிடுங்கள் சகோதரர்களே... என்னைக் காப்பாற்றுங்கள்; எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். 

போலீஸார் வெளியிட்ட வீடியோ காட்சிகள், திருடன் எழுதிய கடிதம் ஆகியவை சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. திருடனின் கடிதம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Video Credit - Waterbury Police DepartmentTrending Articles

Sponsored