``பாதி உடம்பு எரிந்தபடி ஓடிவந்தாள் !” அமெரிக்காவில் ‘ஃபயர் சேலஞ்ச்’ விபரீதம்!Sponsoredந்த இணைய உலகம், மனித மனங்களில் இருக்கும் பல விநோத குணங்களை நாளுக்கு நாள் வெளிச்சம் போட்டு வருகிறது. அவற்றில் பல குரூரத்திலும் விபரீதத்திலும் கொண்டுபோய் விடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான், அமெரிக்காவின் டெட்ராயிட் ( Detroit) நகரில் நடந்துள்ளது.

சமீபமாக, ஃபயர் சேலஞ்ச் (Fire Challenge) என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு சவால் உலாவருகிறது. எரியூட்டும் ரசாயனத்தை (குறிப்பாக, மது வகையான திரவம்) உடம்பில் ஊற்றிக்கொண்டு, நெருப்பைப் பற்றவைத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தீ உடம்பில் பரவுவதற்குள் அணைத்துவிட வேண்டும். இந்தச் சவாலில் மது போன்ற திரவத்தை உடம்பில் ஊற்றிக்கொண்டு தீ மூட்டி, உடனே அணைத்துவிடும்போது, காயம் ஏற்படாமல் தப்பிக்கலாம். இதுதான் இந்தச் சவாலில் உள்ள ட்ரிக். ஆனால், இதை எதிர்கொள்ளும் பலரும், ட்ரிக்கைச் சரியாகக் கையாள தெரியாமல் விபரீதத்தில் சிக்குகிறார்கள். அதில் ஒருவர்தான் டெட்ராயிட் நகரின் 12 வயது டிமியாஹ் லாண்டெர்ஸ் ( Timiyah Landers).

விளையாட்டாக ஃபயர் சேலஞ்சில் இறங்கியவர், உடலில் பாதி எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (17ம் தேதி) மதிய உணவு சாப்பிட்டு ஓய்வாக இருந்த டிமியாஹின் தாய் பிராண்டி ஒவென்ஸ் ( Brandi Owens), திடீரென பெரும் அலறல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டார். சில நொடிகளிலேயே, அவரின் மகள் டிமியாஹ் லான்டெர்ஸ், உடம்பில் தீ பற்றி எரியும் நிலையில், மாடிப்படியிலிருந்து அலறியபடி ஓடி வருவதைக் கண்டார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன ஓவென்ஸ், தீயை அணைக்க முயற்சி செய்தார். ``அவள் தலைமுடியிலிருந்து முட்டிவரை எரிந்துகொண்டிருந்தாள். நான் அதிர்ச்சியில் அலறிவிட்டேன். அது, மிகவும் மோசமாக இருந்தது” என அந்தச் சம்பவத்தை விளக்குகிறார்.

Sponsored


அப்போது, அங்கே வந்த ஒவென்ஸின் நண்பரான மர்குயில் ஷோலர் ( Marquell Sholar), விரைந்து செயல்பட்டு பாத்டப்பில் சிறுமியைத் தள்ளியிருக்கிறார். எரிந்துகொண்டிருந்த டிமியாஹின் ஆடைகளைக் கைகளாலே உதறிவிட்டுள்ளார் ஓவென்ஸ். ``நான் நெருப்புக்குள் கையைவிட்டு ஆடைகளைத் தூக்கி எறிந்தேன். அப்போது என் கைகள் காயப்பட்டத்தை அறியவில்லை. என் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்தது” என்கிறார். 

Sponsored


இந்த பயர் சேலஞ்சை 2012-ம் ஆண்டில், முதல்முறையாக ஒருவர் செய்து பதிவேற்றினார். பிறகு, 2014-ம் ஆண்டில் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. ஒரே நாளில் 10 பேராவது இந்தச் சவாலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், இந்த விபரீத விளையாட்டுக்கு எதிராக விழிப்புஉணர்வு செய்யப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் இதன் மோகம் குறைந்தது. ஆனால், விபரீதம் முற்றிலும் நீங்கிவிடவில்லை என்பதற்குச் சாட்சியே இந்த 12 வயதுச் சிறுமி.

Pictures Courtesy: detroitnews.com

சில மாதங்களுக்கு முன்பு, `ப்ளு வேல் சேலஞ்ச்’ (Blue Whale Challenge) அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கடந்த ஆண்டு, சமூக வலைதளங்களில் பரவிய `ஹாட் வாட்டர் சேலஞ்ச்' ( Hot Water Challenge) இதே ரகம்தான். அமெரிக்காவின் ஃபுளோரிடாவைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமியை, சகோதரர்கள் ஸ்ட்ரா ( Straw) மூலம் கொதிக்கும் நீரைக் குடிக்கச் செய்ததில், அந்தச் சிறுமி இறந்தேபோனாள்.

இப்படிச் சமூக வலைதளங்களில் குழந்தைகளையும் இளைஞர்களையும் குறிவைத்து, உருவாக்கப்படும் விளையாட்டுகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இணையத்தில் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதுடன், கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படவும் வேண்டும். Trending Articles

Sponsored