கோல்ஃப் பந்தைத் தூக்கிச் செல்லும் நரி! வைரலாகும் வீடியோஅமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கோல்ஃப் விளையாடும் ஒருவரின் பந்தை, நரி ஒன்று தூக்கிக்கொண்டு ஓடியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

Sponsored


அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள கோல்ஃப் மைதானத்தில் ஹேன்ங்க் டௌனி என்பவர் அவரின் நண்பர்களுடன் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்தார். அவர்கள், விளையாடுவதை இரண்டு நரிகள் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தன. அப்போது, டௌனி, பந்தை ஓங்கி அடித்தார். அந்தப் பந்து தூரத்தில் சென்று விழுந்தது. அதைப் பார்த்த நரி, ஓடி வந்து பந்தைத் தூக்கிக்கொண்டு ஓடியது. இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவானது. ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored