கேரளாவுக்கு 700 கோடிரூபாய் நிதி அறிவிக்கவில்லை..! யூ.ஏ.இ விளக்கம்Sponsored'கேரளாவுக்கு நிவாரண நிதியாக எவ்வளவு பணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை' என்று இந்தியாவுக்கான ஐக்கிய அரசு அமீரகத் தூதர் அஹமது அல்பன்னா தெரிவித்துள்ளார். 

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரசு அமீரகம் 700 கோடி ரூபாய் வழங்க முடிவெடுத்துள்ளது என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். அதையடுத்து, 'பேரிடர் காலங்களில் வெளிநாடுகள் வழங்கும் நிதியை ஏற்பதில்லை என்று விதி இருப்பதால், யூ.ஏ.இ அறிவித்த நிதியை மத்திய அரசு மறுத்துவிட்டது' என்று செய்திகள் வெளிவந்தன. எனவே, மத்திய அரசுமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

Sponsored


இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய இந்தியாவுக்கான ஐக்கிய அரசு அமீரகத் தூதர், 'கேரளாவுக்கு உதவுவதற்காக தேசியக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு, இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து, நிவாரணப் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா? என்பதை உறுதிசெய்யும். இதுவரை, நிவாரணப் பணம்குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை' என்று தெரிவித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored