அண்ணா, அமெரிக்கா, ஃபெடரலிஸம், கருணாநிதி...! சுவாரஸ்ய ஒற்றுமைகள்Sponsoredந்தோ - அமெரிக்கன் அசோஷியேஷன் மற்றும் இந்தோ - அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இணைந்து 'மெட்ராஸ் தின'த்தைக் கொண்டாடியது. சென்னை மகளிர் கிருத்துவ கல்லூரியில் நடைபெற்ற குழு விவாதத்தில் "We the People: Historic ties between Madras and the US" என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம், எழுத்தாளர் சித்ரா வீரராகவன், அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சேர்மன் ராம்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அமர்வில் அமெரிக்க தூதரகத்தின் தகவல் அதிகாரி கேத்லின் ஹொய்ஸ் நெறியாளராக இருந்தார்.

இதில் சென்னைக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள உறவுகள், ஒற்றுமைகள் குறித்து பேசப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராம் பேசும் போது "சென்னைக்கும் அமெரிக்காவுக்குமான உறவு இன்று நேற்று அல்ல, 1688 முதலே இருந்துள்ளது. சென்னையின் முதல் மேயரான ஹிக்கின்ஸன் ஒரு அமெரிக்கர். முதன்முதலாகத் தமிழ் - ஆங்கில அகராதியைத் தந்த பாதிரியார் வின்ஸ்லோ சர்ச் ஒரு அமெரிக்கர். மெட்ராஸுக்கு கவர்னராக இருந்த தாமஸ் மன்ரோ ஒரு அமெரிக்கர். இப்படி அமெரிக்காவோடு அதிகம் தொடர்பு கொண்ட பகுதியாக இந்தியாவில் மெட்ராஸ் (சென்னை) இருந்துள்ளது.

அதுமட்டுமல்ல அமெரிக்கா மாநில சுயாட்சியை அதன் கொள்கையாகக் கொண்டுள்ளது. ஃபெடரலிஸத்தை அமெரிக்கா பின்பற்றுகிறது. அதைத்தான் இங்கு அண்ணாதுரையும், கருணாநிதியும் 70 ஆண்டுகளாகப் பேசினர். மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாடு உரிமைகளைத் தட்டிக்கேட்கும் என்பதை மெட்ராஸ் காலத்திலிருந்தே இங்குப் பின்பற்றி வருகிறார்கள். அமெரிக்க சிந்தனை மெட்ராஸோடு இணைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்.

Sponsored


இரண்டாம் உலகப்போரில் மெட்ராஸில் எடுக்கப்பட்ட பெரும்பாலான புகைப்படங்களை எடுத்தவர்கள் ஹென்ஸ்லி மற்றும் அவரது அமெரிக்க நண்பர்கள். அமெரிக்காவும் மெட்ராஸும் வரலாற்று ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பிணைப்பில் இருந்துள்ளன" என்றார்.

Sponsored


அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சேர்மன் ராம்குமார் பேசும்போது "வர்த்தக ரீதியாக அமெரிக்காவும், மெட்ராஸும் பல விதங்களில் இணைந்துள்ளன. ப்ரூக்ஸ் பிரதர் மெட்ராஸ் ஃபேபரிக் நிறுவனம் துவங்கி தற்போது ஆன்ட்ராய்டு இயங்குதளம் தயாரிக்கும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வரை மெட்ராஸோடு தொடர்புடைய பெயர்கள்தான். பெட்ரோலில் இருந்து டீசல் கார்கள் மாற்றப்பட்டது இந்திய நகரங்களிலேயே முதலில் சென்னையில் தான்.

கல்வி என்பது அதிகமாகச் சென்னையில் தான் வளர்க்கப்பட்டது. அதற்கு அமெரிக்காவின் பங்கு அளப்பரியது. மிகப்பழைமையான மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜ் அதற்குப் பெரும் உதாரணம். ஆண்டுக்கு 1,86,000 பேர் அமெரிக்காவுக்குக் கல்வி கற்க வருகிறார்கள்" என்றார்.

இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் பேசிய அமெரிக்க தூதரக ஜெனரல் ராபர்ட் பர்கெஸ் " சென்னையில் நான் ஒருவருடமாக தூதரக ஜெனரலாக இருக்கிறேன். சென்னை எனக்கு மிகவும் பிடித்த ஊர். முதல் உலகப்போரில் தாக்கப்பட்ட ஒரே இந்திய நகரமும், இரண்டாம் உலகப்போரில் பெரிதாக பாதிக்கப்படாத இந்திய நகரமும் சென்னைதான்." என்றார். பிரசிடென்சி கல்லூரியில் காந்தி பற்றி மார்ட்டின் லூதர் கிங் 1959ல் பேசியதையும் நினைவுகூர்ந்தார்.

சென்னையோடு அமெரிக்கா கலை, பண்பாடு, அரசியல், வர்த்தகம் என அனைத்துத் துறைகளிலும் இணைந்து செயல்படுகிறது என்பதை அமெரிக்க தூதரக ஜெனரல் விளக்கினார். வருடாவருடம் சென்னை தின கொண்டாட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்தனர். Trending Articles

Sponsored