`பிரத்யேக கழிவறை, டி.வி வசதி' - விஜய் மல்லையாவுக்காக தயார் செய்யப்பட்ட 12-ம் எண் அறை!Sponsoredவிஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர் அடைக்கப்படவுள்ள சிறை குறித்த வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது, அதை மீட்டெடுக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்றார் விஜய் மல்லையா. ஆனால், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்த அவர் மீது வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு போடப்பட்டதை அடுத்து மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் வழக்குகளைப் பதிவு செய்தன. லண்டனில் இருக்கும் மல்லையாவை நாடு கடத்தும்படி பிரிட்டனுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. மேலும், இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் மல்லையாவின் சொத்துகளை முடக்க உலகளாவிய உத்தரவைப் பிறப்பித்தன. அதை இங்கிலாந்தில் பதிவு செய்தன. இதை எதிர்த்து மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த பிரிட்டன் நீதிமன்றம் மல்லையா சொத்துகளை முடக்க  உத்தரவிட்டது. 

Sponsored


இதனிடையே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. `பிரிட்டன் குடியுரிமை பெற்றவரான மல்லையா இந்தியச் சிறையில் அடைக்கப்படலாம். இந்தியச் சிறைகளில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது’ என்று மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையிட்டார். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் மல்லையா அடைக்கப்பட உள்ள சிறையின் புகைப்படத்தைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் மல்லையா அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி அந்தச் சிறையின் புகைப்படங்களை இந்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால், அந்தப் புகைப்படங்கள் தெளிவாக இல்லை எனக் கூறி வீடியோ தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. 

Sponsored


அந்த உத்தரவுப்படி, மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலை குறித்த வீடியோ வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வீடியோவில், சிறைச்சாலை அறை எண் 12-ல் மல்லையாவுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதன்படி அந்த அறையில் அவருக்கென, `பிரத்யேக கழிவறை, சூரிய வெளிச்சம் வரும்படியான காற்றோட்ட ஜன்னல், டி.வி, தலையணையுடன் கூடிய சுத்தமான படுக்கை' போன்ற காட்சிகளும், சிறையில் உள்ள பலத்த பாதுகாப்பு, சிசிடிவி வசதிகள், நூலக வசதிகள், சுகாதார வசதிகள் குறித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored