அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கைன் காலமானார்Sponsoredமூளை புற்றுநோயால் அவதியடைந்து வந்த ஜான் மெக்கைன் இன்று காலை காலமானார். 

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகவும், செனட்டராகவும் இருந்தவர் ஜான் மெக்கைன். 81 வயதான இவர் கடந்த வருடத்தில் இருந்து மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளியன்று இவருக்கு சிகிச்சையளிப்பதை அவரது குடும்பத்தினர் நிறுத்தியுள்ளனர். இதனால் இன்று காலை (அமெரிக்க நேரப்படி நேற்று மாலை) மெக்கைன் உயிரிழந்துள்ளார்.

Sponsored


இவர் ஆறு முறை செனட்டராகவும், கடந்த 2008-ம் ஆண்டு தேர்தலில் ஓபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளராகவும் திகழ்ந்தவர். முன்னதாக நடைபெற்ற வியட்நாம் போரின் போது விமானியாக இருந்த மெக்கைன் அந்தப் போரின் நாயகனாகக் கருதப்பட்டார். மேலும் போரின் போது மெக்கைனின் விமானம் தகர்க்கப்பட்டதால் 5 வருடங்கள் போர் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜான் மெக்கைனின் மறைவுக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored