விமானத்தை விட்டு இறங்கி ‘கிகி சேலஞ்ச்’ - பெண் விமானியின் விபரீத விளையாட்டு!Sponsoredகார் ஓட்டுபவர்கள்தான் ‘கிகி சேலஞ்ச்’ செய்வார்களா? ஏன் விமானிகளால் முடியாதா... என்று பெண் விமானி ஒருவர் களத்தில் இறங்கிவிட்டார். 

kiki, do you love me? Are you riding? என்ற வரிகளைப் பாடிக்கொண்டே சாலைகளில் சாகசம் செய்யும் விபரீதம்தான் ‘கிகி சேலஞ்ச்’. கனடாவில் பிரபல ராப் பாடகர் டிரேக் கிரஹாம் இன் மை ஃபீலிங்ஸ் என்ற பாடலை வைத்துதான் இந்த சேலஞ்ச் தொடங்கியது. கார்களில் செல்லும் மக்கள், இந்தப் பாட்டை தனது காரில் வைத்துவிட்டு, ஓடும் காரிலிருந்து இறங்கி சாலையில் பாட்டுக்கு ஏற்றவாறு நடனமாட ஆரம்பித்து விடுகிறார்கள். சிலர், இருசக்கர வாகனத்தின்மீது ஏறியும் நடனமாடுகிறார்கள். இதை ட்விட்டரில்  #InmyFeelings மற்றும் #kikichallenge என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டனர். சமூக வலைதளத்தில் இது வைரலாகப் பரவ ஆரம்பித்தது. பல்வேறு நாடுகளில் இந்த ‘கிகி சேலஞ்ச்’ இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் சாலைவிபத்து, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. இது, போக்குவரத்து காவல் துறையினருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, தற்போது கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Sponsored


இந்த நிலையில், கார் ஓட்டுபவர்கள்தான் ‘கிகி சேலஞ்ச்’ செய்வார்களா? ஏன் விமானிகளால் முடியாதா என்று பெண் விமானி ஒருவர் களத்தில் இறங்கிவிட்டார். அலெஜாண்ட்ரோ (Alejandra) என்ற அந்த விமானி, விமானத்தை இயக்கிவிட்டு, ‘கிகி சேலஞ்ச்’செய்துள்ளார். விமானத்தை இயக்கிவிட்டு ஆதிலிருந்து இறங்கும் பெண் விமானி மற்றும் துணை விமானி இருவரும் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடுகின்றனர். விமானம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதை விமானத்தில் இருந்தவாறே ஒருவர் படம்பிடிக்கிறார். நல்ல வேளையாக விமானம் விபத்தில் சிக்கவில்லை. இதை அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவருக்கு, ஏராளமான லைக்ஸ் குவிந்துவருகிறது. சமூக வலைதளத்திலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆபத்தை உணராமல், இளைஞர்கள் தொடர்ந்து இந்த சாகச விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored