``இடுக்கி பத்துன்னா இந்த அணைகள் நூறு!" - உலகின் ராட்சத அணைகள்Sponsoredடவுளின் தேசமான கேரளா சில நாள்கள் முன்பு வெள்ளத்தில் மிதந்தது. கேரளாவில் கட்டப்பட்டுள்ள அணைகளைத் தாண்டி தண்ணீர் கடலுக்குச் சென்றது. வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், கட்டியிருக்கும் அனைத்து அணைகளிலும் போதுமான தண்ணீர் சேகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அடுத்த சில மாதங்களில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைக் கேரளம் சமாளித்துக்கொள்ளும். தண்ணீர் கடலில் கலப்பதைத் தவிர்த்து விவசாயம், குடிநீர் மற்றும் இன்னும் பிற தேவைகளுக்கு அணைகள் தண்ணீரை வழங்குவதில் முக்கியப் பங்கை வகிக்கிறது. அவற்றில் உலகில் உள்ள முக்கியமான சில அணைகளைப் பற்றிக் காணலாம். 

1. கரிபா அணை (Kariba Dam):

Sponsored


Photo - ESI-Africa.com

Sponsored


இந்த அணை ஜிம்பாப்வேயில் அமைந்துள்ளது. இது உலகின் முன்னணி நீர் சேமிப்பு வசதியைக் கொண்ட அணையாகும். மொத்தமாக 185 பில்லியன் கன மீட்டரைக் கொண்டது.617 மீட்டர் நீளமும், 128 மீட்டர் உயரமும் கொண்டது. ஜிம்பாப்வே மற்றும் சாம்பியாவில் இருக்கும் மின் சக்தியை 60 சதவிகிதம் அளவுக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. இதன் கட்டமைப்பு சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத வகையில் உறுதியாகவும், சிறப்பாகவும் கட்டப்பட்டுள்ளது. 

2. ப்ராட்ஸ்க் அணை (Bratsk dam)

ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் கட்டப்பட்டுள்ள இந்த அணை உலகின் மிகப்பெரிய இரண்டாவது அணை. அங்காரா ஆற்றின் இடையே ப்ராட்ஸ்க் அணை கட்டப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையைப் போக்குவதற்காகக் கட்டப்பட்டது. 169 பில்லியன் கன மீட்டர் கொள்ளளவைக் கொண்டது. 1262 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையானது 125 மீட்டர் உயரம் கொண்டது.

3. அக்கோஸ்ம்பா அணை (Akosombo Dam)

Photo - GhanaNation

இது கானாவில் (Ghana) காணப்படும் பெரிய அணைக்கட்டு. வால்டா ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் வால்டா ஏரியும் அமைந்துள்ளது. அணையின் கொள்ளளவு 144 மில்லியன் கன மீட்டர். 700 மீட்டர் நீளமும், 134 மீட்டர் உயரமும் கொண்டது. 1966-ம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு மின்சார உற்பத்தி செய்யப்பட்டது.

4. டேனியல் ஜான்சன் அணை (Daniel Johnson Dam)

Photo - smartec.ch

இந்த அணையும் கனடாவில்தான் கட்டப்பட்டுள்ளது. இதுவும் உலகின் மிக முக்கியமான பெரிய அணையாகும். இது மேனிக்கோகன் ஆற்றின் (Manicouagan River) குறுக்கே அமைக்கப்பட்டுள்ளதால் மேனிக் பைவ் டேம் (manic five dam) அணை (Manicouagan Dam) எனவும் அழைக்கப்படுகிறது. டேனியல் ஜான்சன் அணை 139 பில்லியன் கனமீட்டர் கொள்ளளவைக் கொண்டது. 1310 மீட்டர் பரப்பளவும், 213 மீட்டர் உயரமும் கொண்டது. 13 மதகுகளைக் கொண்டு மின்சாரத்தை அதிகரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ளன. 

5. குரி அணை (Guri Dam)

Photo - perierga.gr

குரி அணையானது வெனிசுலாவில் இருக்கிறது. இதன் அருகில் குரி ஏறியும் அமைந்துள்ளது. 35 பில்லியன் கன மீட்டர் கொள்ளளவைக் கொண்டது. 163 மீட்டர் உயரமும், 1300 மீட்டர் நீளமும் கொண்டது. இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அணையின் கட்டுமானம் 1988-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அணையின் முக்கிய நோக்கம் மின்சார உற்பத்தியும், விவசாயத்துக்குத் தண்ணீர் கொடுப்பதும்தாம். மொத்த வெனிசுலாவின் மின் தேவையில் 70 சதவிகிதத்தை இந்த அணை பூர்த்தி செய்கிறது. 

மேற்கண்ட ஐந்து அணைகளைத் தாண்டி முக்கியமான சில அணைகளும் இருக்கின்றன. இந்த அணைகள், மின்சார உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு கட்டப்பட்டாலும், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் அதிகமான தண்ணீரையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. Trending Articles

Sponsored