கடலின் 40.6 மீட்டர் ஆழத்தில் 41 நிமிடங்கள்..! ஸ்கூபா டைவிங்கில் புதிய சாதனை படைத்த 95 வயது `இளைஞர்’Sponsoredசாதனை படைக்க வயது தடையில்லை என நிரூபித்திருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 95 முதியவர் ஒருவர்.

Photo credit -twitter/@SaleSharksRugby

Sponsored


சாகச விரும்பிகளுக்கான விளையாட்டு என்று பலரால் அறியப்படும் ஸ்கூபா டைவிங், நார்த் பேயின் முக்கிய நீர் விளையாட்டுகளில் ஒன்று. கடலுக்குள் மூழ்கும் ஸ்கூபா டைவிங்கில் தற்போது புதிய சாதனைப் படைத்திருக்கிறார் முதியவர் ரே. மத்திய கிழக்கு நாடான சைப்ரஸைச் சேர்ந்தவர் ரே வூல்லி (Ray Woolley). கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தனது 95வது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார் ரே. இரண்டாம் உலகப் போரின் போது ரேடியோ ஆபரேட்டராக இருந்த ரே, வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ட் சன்லைட் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

Sponsored


ஸ்கூபா டைவிங்கில் 58 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ரே. உலகின் மிக வயதான ஸ்கூபா டைவர் என்ற பெருமை இவரையே சேரும். இவர், கடந்த ஆண்டு, 38.1 மீட்டர் ஆழ் கடலுக்கடியில், 41 நிமிடங்கள் மூழ்கியிருந்து ஸ்கூபா டைவிங்கில் சாதனை படைத்தார். தற்போது, அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார். கடந்த 1-ம் தேதியன்று தனது குழுவினருடன் மத்திய தரைக்கடலுக்குச் சென்ற ரே, 40.6 மீட்டர் ஆழ் கடலுக்கடியில், 44 நிமிடங்கள் மூழ்கியிருந்து புதிய சாதனைப் படைத்திருக்கிறார்.

Photo Credit-twitter/@Jessica_Wayne_

தனது சாதனை குறித்து விவரிக்கும் ரே,`எனது சாதனையை நானே முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் பெருமையாக உணர்கிறேன். இதேபோல், உடல் திடமாக இருந்தால், அடுத்த ஆண்டும் எனது சாதனையை முறியடிக்க முடியும் என நம்புகிறேன். நான் யார் என்று நிரூபிக்க முயற்சி செய்கிறேன். என் வயதிலும் சாதிக்க வேண்டும் என்றால் உடல் பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி மிக முக்கியமானது' எனக் கூறினார்.Trending Articles

Sponsored