மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! - கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்சாம் ரடுலங்கி பி.பி 1600(SAM Ratulangi PB 1600). இந்தோனேஷியாவை சேர்ந்த சரக்கு கப்பலான இது 2001 -ல் கட்டப்பட்டது. 580 அடி நீளம் கொண்ட இந்தக் கப்பல் கடைசியாகக் கடந்த 2009 -ம் ஆண்டில் தைவான் கடல் பகுதியில் தென்பட்டது. அதன் பின்னர் இந்தக் கப்பல் காணாமல் போன நிலையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் திடீர் என்று தெற்கு மியான்மர் கடல் பகுதியில் மீனவர்கள் கண்களில் பட்டது. அப்போது மீனவர்கள் சிலர் கப்பலில் ஏறி சோதனை செய்தனர். அந்தக் கப்பலில் மனிதர்கள் யாரும் இல்லை. அதில் சரக்குகளும் இல்லை. மியான்மர் கடல் பகுதியில் இத்தனை பெரிய கப்பல் திடீரென எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்தது. 

Sponsored


Photo: Facebook/YANGON POLICE

Sponsored


மீனவர்கள் மியான்மர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் அளித்தனர். அவர்களும் கப்பலை சோதனையிட்டனர். இதனிடையே கடந்த 2009 -ம் ஆண்டில் காணாமல் போன கப்பல் திடீரென்று தோன்றியதால் இதனைப் பலர் கோஸ்ட் ஷிப்(பேய்க் கப்பல்) என்று அழைக்கத் தொடங்கினர். இதனால் இந்தக் கப்பல் குறித்து தகவல் வைரலாக பரவத்தொடங்கியது.
 
ஆனால் கோஸ்ட் ஷிப் என்ற கருத்தை மறுத்த மியான்மர் அதிகாரிகள், 2009 -ம் ஆண்டு தான் இது கடைசியாக காணப்பட்டது என்பதற்காக இதனை மூழ்கிய கப்பல் என்று சொல்ல முடியாது.  இந்தக்கப்பல் சமீபத்தில் கைவிடப்பட்டது தான் என்கின்றனர் உறுதியாக. இது தொடர்பான விசாரணையில் மியான்மர் கடல் பகுதியில் இழுவைக்கப்பல் ஒன்றை கண்டுப்பிடித்தனர். அந்த கப்பலில் பயணம் செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கப்பலை, வங்கதேசத்தில் இருக்கும் கப்பல் பணிமனைக்கு இழுத்துச் செல்ல முயற்சிகள் நடந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக இழுவைக்கயிறு அறுந்தது. அதனால் இந்தப் கப்பலை கைவிடும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். அதனால் கோஸ்ட் ஷிப் குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored