ஆழ்கடல் வீரரை சுற்றி வளைத்த ஆக்டோபஸ்; சாமர்த்தியமாக தப்பிய வீரர் - வைரலாகும் வீடியோSponsoredரஷ்யாவில் ஆழ்கடல் உயிரினங்களைப் படம் பிடிக்கச் சென்ற நீச்சல் வீரரை மிகப் பெரிய ஆக்டோபஸ் ஒன்று சுற்றிவளைத்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. 

ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி ருடாஸ் என்ற ஆழ்கடல் நீச்சல் வீரர், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலுள்ள பிரைமோர்ஸ்கி கிராய் என்ற கடலின் ஆழ்பகுதியில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ஆக்டோபஸ் ஒன்று, அவரின் அருகே சென்று அதனது கரங்களால் அவரை சுற்றிவளைத்தது. அதனால், அவரது கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் சேதமானது. மேலும், அவரை முழுவதுமாக ஆக்டோபஸ் ஆட்கொள்ளும் சூழல் உருவாக நேர்ந்தது.

Sponsored


நிலைமை மோசமடைவதை உணர்ந்த ஆழ்கடல் வீரர் டிமிட்ரி, சாதுர்யமாக செயல்பட்டு ஆக்டோபஸின் பிடியிலிருந்து அவரை விடுவித்துக்கொண்டார். எனினும், ஆக்டோபஸ் அவரது கேமராவைப் பிடித்துக்கொண்டது. பின்னர், நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு கேமராவை எடுத்துக்கொண்டு கடலின் மேல் மட்டத்துக்கு வந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sponsored
Trending Articles

Sponsored