`சர்வேதச விண்வெளி மையத்தில் ஆக்சிஜன் கசிவு ஏன்?' - விளக்கமளித்த நாசாSponsoredசர்வேதச விண்வெளி மையம் (ISS) பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது. இங்கே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி  வீரர்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது  இதில் ஆறு விண்வெளி வீரர்கள் உள்ளனர். இந்த நிலையில், சென்ற புதன் கிழமை இரவு 7 மணி அளவில் சர்வேதச விண்வெளி மையத்தின் உட்பகுதியில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவது தெரியவந்தது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இருக்கும் பகுதியில் 2 மி.மீ அளவில் துளை ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

Sponsored


விண்கற்களின் தாக்குதலால் இந்த துளை ஏற்பட்டிருக்கலாம் என "நாசா" தரப்பு தெரிவித்தது. அதன் பிறகு அந்தத் துளை சரி செய்யப்பட்டது. இதனால் விண்வெளி வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ``அவரச காலத்தில் எப்படிச் செயல்படுவது என்பதை நேற்றைய நிகழ்வு உணர்ந்துகொள்ளச் செய்திருக்கிறது. பாதிப்பைச் சரி செய்வதற்கு பல்வேறு தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்தனர்" என ஐரோப்பிய விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் ஹெர்ஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Sponsored
Trending Articles

Sponsored