பாகிஸ்தானின் 13வது அதிபர் ஆகிறார் ஆரிப் ஆல்வி..!



Sponsored



பாகிஸ்தானின் புதிய அதிபராக இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஆரிப் ஆல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் வரும் 8-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனையொட்டி புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சியைச் சேர்ந்தவரும், பல் மருத்துவருமான ஆரிப் ஆல்வி அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் ஏய்தாஸ் அசானும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மவுலானா பசல் உர் ரஹ்மானும் போட்டியிட்டனர். 

Sponsored


பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் என மொத்தம் 430 பேர் வாக்களிக்கக் கூடிய இந்தத் தேர்தலில் ஆரிப் ஆல்வி மொத்தம் 212 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து பாகிஸ்தானின் 13வது அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார். அவர் எப்போது பதவியேற்பார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம். ஆரிப் ஆல்வி தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். ஆல்வி தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சியின் செகரட்டரி ஜெனரலாக கடந்த 8 ஆண்டுகள் பதவி வகித்ததுடன் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலிலும் கராச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Sponsored




Trending Articles

Sponsored