ஆண்ட்ராய்டு போனுக்கு ஐபோனில் இருந்து விளம்பரம் செய்த அனுஷ்கா ஷர்மா!தற்போது மற்ற இடங்களைவிட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்வதையே நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன. அதில் ஒரு வகை பிரபலங்களின் மூலம் தங்கள் பொருள்களை மக்கள் இடையே கொண்டு சேர்ப்பது. அவரவருக்கு இருக்கும் ஃபாலோயர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து போஸ்ட் ஒன்றுக்கு விலை கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களுக்கு விளம்பர தூதர் ஆனார். அப்படி கூகுள் பிக்ஸல் பற்றி பதிவு செய்த ஒரு ட்வீட்டில் கவனக்குறைவால் நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்டுள்ளார் அனுஷ்கா ஷர்மா.

Sponsored


அதாவது நாயுடன் தான் இருக்கும் போட்டோவை பதிவு செய்த அனுஷ்கா #Pixel2XL #TeamPixel என்ற ஹேஷ்டேக்குகளைச் சேர்த்து  என்று கூகுளின் இந்திய ட்விட்டர் பக்கத்தையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்தது போல ஐபோன் ட்விட்டரில் இருந்து தான் இது பதிவு செய்ததாகக் கவனிக்காமல் விட்டுவிட்டார் அவர்.  அமெரிக்காவின் பிரபல யூடியூபர்களில் ஒருவரான மார்கியூவஸ் பிரவுன்லி என்பவர் இதை எடுத்து சுட்டிக் காட்டியுள்ளார்.  மேலும் ``இது எப்படி மீண்டும் மீண்டும் நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால், இந்தச் சம்பவங்கள் மிகவும் வேடிக்கையாக உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே இவர் தான் கேல் கடோட் வாவே நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்காக பதிவு செய்திருந்த ட்வீட்டை சுட்டிக்காட்டி கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்கா பிக்ஸலில் போட்டோ எடுத்து பின் அதை ஐபோனில் பதிவு செய்திருக்கலாம் என ஒரு பக்கம் ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் சுதாரித்த அனுஷ்கா இந்த ட்வீட்டை டெலீட் செய்து சிறிது நேரம் கழித்து மீண்டும் அதையே பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored