விமானப் பயணிகள் கவனத்துக்கு..! - கழிவறையைவிட இங்குதான் வைரஸ் அதிகம்Sponsoredகழிவறையைவிட, விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்திலுள்ள பிளாஸ்டிக் தட்டுகளில் (Trays) தான் அதிக வைரஸ் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 

இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி வாண்டா என்ற விமான நிலையத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அதில் பயணிகள் அதிகம் உபயோகிக்கும் இடங்கள், பொருள்களைச் சோதனை செய்து எதில் அதிகம் வைரஸ் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வு. அதில் விமான நிலையத்திலுள்ள பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்திலுள்ள கைப் பைகளை வைக்கும் பிளாஸ்டிக் தட்டுகளில் கழிவறையைவிட அதிகம் வைரஸ் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தட்டுகளில் ரினோவைரஸ் இருப்பதாகவும் இதன் மூலம் காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்களை நாம் பயன்படுத்திய பின்னர் கைகளை நன்கு கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

Sponsored


இது மட்டுமல்லாது கட்டணம் செலுத்தும் இடம், படிக்கட்டுகளின் கைபிடிகள், பாஸ்போர்ட் சோதனை செய்யும் இடம், குழந்தைகள் விளையாடும் இடங்களிலும் அதிக வைரஸ் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தச் சோதனையின் மற்றொரு விசேஷம் என்னவென்றால் சோதனை நடத்தப்பட்ட விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் அதிக வைரஸ்கள் இல்லை, மிகவும் தூய்மையாக உள்ளது என்பதுதான்.

Sponsored
Trending Articles

Sponsored