விமானப் பயணத்தில் 100 பேருக்கு உடல் பாதிப்பு; ப்ளு காய்ச்சல் பீதியால் பதறிய நியூயார்க் விமான நிலையம்Sponsoredதுபாயிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற விமானத்தில் பயணித்த 521 பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில் 11 பேருக்கு ப்ளு வைரஸை ஒத்த பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர்கள் நியூயார்க்கிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

துபாயிலிருந்து எமீரேட்ஸ் விமானம் 521 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரம் நோக்கிச் சென்றது. அந்த விமானத்தில் பயணித்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சிலர், ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள். மெக்கா மசூதி அமைந்துள்ள பகுதிகளில் ப்ளு வைரஸ் பரவிவருகிறது. அதையடுத்து, விமானப் பயணிகள் ப்ளு வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.  

Sponsored


இதுகுறித்து விமானத்திலிருந்து நியூயார்க் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அமெரிக்க விமான நிலையத்தில் அந்நாட்டு மருத்துவக் குழு முழு ஏற்பாடுகளுடன் காத்திருந்தது. விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளுக்கு மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 11 பயணிகளுக்கு மட்டும் ப்ளு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று கருதப்பட்டு நியூயார்க் நகரத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு விமான நிலைய சோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

Sponsored
Trending Articles

Sponsored