`கேரளா வெள்ளம்; கலிபோர்னியா காட்டுத் தீ!’ - காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் வேதனை



`காலநிலை மாற்றம் நம்மைவிட வேகமாக முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது’ என ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

Sponsored


புதிய காலநிலை பொருளாதாரம் - 2018 என்ற நிகழ்ச்சியில் பேசிய அண்டோனியோ கட்டர்ரெஸ்,`மழை, வெள்ளம், காட்டுத் தீ, புயல், வறட்சி, உயரும் கடல் மட்டம் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பேரழிவுகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த ஆண்டில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளம், கலிபோர்னியாவிலும் கனடாவிலும் ஏற்பட்ட கொடூரமான காட்டுத்தீ அதனால் ஏற்பட்ட சேதங்கள் எண்ணில் அடங்காதவை. அதோடு, தென் துருவ பகுதியில் வெப்பம் அதிகரித்து வருகிறது. காலநிலையின் போக்கு தெளிவாக உள்ளது. 

Sponsored


கடந்த 19 ஆண்டுகளில் 18 ஆண்டுகளில் வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளது. அதேவேளையில் புவியின் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. இத்தகையான அபாயங்கள் அதிகரித்துள்ளதால் காலநிலை மாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர மிகவும் துரிதமாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். காலநிலை மாற்றமானது நம்மைவிட வேகமாக முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.  

Sponsored




Trending Articles

Sponsored