`பொறுமைக்கு நன்றி சொல்லணும்!’ - நெகிழும் உலகின் வயதான தம்பதி



அன்பான உறவுக்கு எப்போதும் ஆயுள் அதிகம். அதிலும், திருமண உறவில் அன்பும் புரிந்துகொள்ளும் தன்மையும்தான் முதல் டாஸ்க். அதை வெற்றிகரமாகச் சாதித்திருக்கிறார்கள் ஜப்பான் தம்பதி. 80 வருடங்களாகக் குடும்ப வாழ்க்கையில் பயணிக்கும் மாசோ மற்றும் மியாகோ, 'வாழ்ந்துகொண்டிருக்கும் உலகின் வயதான தம்பதி' எனக் கின்னஸில் இடம்பிடித்துள்ளனர்.

Sponsored


ஜப்பானைச் சேர்ந்த மாசோ மாட்சூமோடோ (108 வயது), அவரின் மனைவி மியாகோ (100) இருவருக்கும் 1937 அக்டோபரில் திருமணம் நடந்தது. ராணுவ வீரராக இருந்தவர், மாசோ. திருமணமான 80 வருடங்களில் எந்த மனக்கசப்பும் வந்ததில்லை என்கிறார்கள். கடந்த மாதம் இவர்களுக்கு 25 வது பேரக்குழந்தை பிறந்திருக்கிறது. 

Sponsored


Sponsored


மாசோ மற்றும் மியாகோ இருவரின் வயதை இணைத்து, 208 என்ற அடிப்படையில் கின்னஸ் அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கு முன்பு, நார்வே நாட்டின் காரல் மற்றும் குர்ட்ரென் டோல்வன் தம்பதி 210 ஆண்டுகள், டோல்வன் இறக்கும்வரை இணைந்து வாழ்ந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இதுகுறித்து மியாகோ, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் பொறுமைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்" எனக் கண் கலங்குகிறார். "அவர்கள் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்துக்கு வந்திருக்காங்க. இதே மாதிரி எப்போதும் அமைதியான வாழ்க்கையைத் தொடரணும்னு விரும்பறேன். இது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குக் கிடைத்த மரியாதை'' என்கிறார் மகள் ஹிரோமி.



Trending Articles

Sponsored