ஒரே இடத்தில் 168 மண்டை ஓடுகள்! - திகிலூட்டும் மெக்ஸிகோ போதைப்பொருள் புலனாய்வுSponsoredமெக்ஸிகோவின் வெராகுரூஸ் மாகாணத்தில், ஒரே இடத்தில் சுமார் 166 மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வட அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோவில், நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் ஆதிக்கம்செலுத்திவருகின்றன. தொழில்ரீதியான போட்டியில், இந்தக் குழுக்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதும் அதில் பலர் உயிரிழப்பதும் வழக்கமாக நடைபெற்றுவருகிறது. கடந்த வருடம், இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மெக்ஸிகோவின் வெராகுரூஸ் மாகாணத்தில் ஒரே இடத்தில் 250 எலும்புக்கூடுகள் கிடைத்தது. உலகிலேயே ஒரே இடத்தில் அதிக எலும்புக்கூடுகள் கிடைத்தது இதுவே முதல்முறை எனக் கூறப்பட்டது. 

Sponsored


Sponsored


இந்நிலையில், தற்போது இதே வழக்கைத் தழுவிய விசாரணை மீண்டும் வெராகுரூஸ் மாகாணத்தில் நடைபெற்றுவருகிறது. புலனாய்வுத் துறையின் இந்தச் சோதனையின்போது, 32 குழிகளில் சுமார் 166 மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இதே இடத்தில் நிறைய கந்தல் துணிகளும் 144 சிதைந்த அடையாள அட்டைகளும் கிடைத்துள்ளன. இதன் மாதிரிகளைச் சேகரித்து, அவற்றின் டி.என்.ஏ மூலம் தேசிய குடியுரிமை பெற்றவர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு, இறந்தவர்களை அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

மெக்ஸிகோ முழுவதும், கடந்த வருடம் மட்டும் சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 3,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மெக்ஸிகோவைச் சேர்ந்த வன்முறைக் கும்பல்  மக்களைக் கொன்று இதுபோன்ற குழிகளில் புதைத்துவிடுவதாகக் கூறியுள்ளனர். இங்கு கிடைத்த மண்டை ஓடுகளைச் சோதனைசெய்த போது, இரண்டு வருடங்களுக்கு முன்னர், இவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. 

ட்ரோன்கள், ரேடார் கதிர்கள் போன்றவைமூலம் ஒரு மாதமாகத் தேடுதல் பணிகள் நடைபெற்றதாகவும்,  அதன் முடிவில் இவை கிடைத்துள்ளதாகவும் வெராகுரூஸ் மாகாணத்தின் வழக்கறிஞர் ஜார்ஜ் வின்க்ளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மண்டை ஓடுகள் கிடைத்த சரியான இடத்தை அவர் குறிப்பிடவில்லை. அதே பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக ஜார்ஜ் கூறியுள்ளார்.Trending Articles

Sponsored