அசுர உழைப்பில் இருந்து ஓய்வு! - பில் கேட்ஸ் பாதையைத் தேர்ந்தெடுத்த ஆன்லைன் ஜாம்பவான் ஜாக் மா 



Sponsored



ஆன்லைன் வணிக ஜாம்பவான் ஜாக் மா,  ஓய்வு பெறப் போவதாகத் தெரிவித்துள்ளார். 


 

சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, 1999-ம் ஆண்டு 17 பேருடன் சேர்ந்து அலிபாபா என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த 17 பேரில், பலர் ஜாக் மா -விடம் கல்வி பயின்றவர்கள்.   தீயாய் வேலைசெய்த ஜாக் மா, அலிபாபாவை உலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற வைத்தார்.

Sponsored


 சீன மக்கள் மத்தியில்  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறையைப் பிரபலப்படுத்திய பெருமை, ஜாக் மா-வையே சேரும். இன்றைய நாளில், இவரின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலரைத் தொட்டுவிட்டது.   ஆன்லைன் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஜாக் மா, அடிப்படையில் ஒரு ஆங்கில ஆசிரியர் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங்கில ஆசிரியராக இருந்த ஜாக் மா தொழிலதிபராக உருவெடுத்து, இன்று சீனாவில் தொழில் முனையும் ஆர்வமுள்ள இளைஞர்களின் ஹீரோவாக உருமாறியிருக்கிறார். சீன மக்கள் சிலர், தங்கள் வீடுகளில் ஜாக் மா-வின் புகைப்படத்தை வைத்து வணங்குகின்றனர். ஜாக் மா-வின் புகைப்படத்தை வீட்டில் வைத்தால் செல்வம் சேரும் என்பது இவர்களின் நம்பிக்கை.  அலிபாபா நிறுவனத்தின் அசுர வளர்ச்சியைக் கண்கூடாகப் பார்த்தவர்களாயிற்றே. அதனால்தான் ஜாக் மா மீது இவ்வளவு ஈர்ப்பு. 

Sponsored



 

ஆங்கில ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய ஜாக் மா, தற்போது மீண்டும் கல்வித் துறைக்கே தன்னை அர்ப்பணிக்க உள்ளார். நியூ யார்க் டைம்ஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்த ஜாக் மா, ‘நான் ஓய்வு பெறப்போகிறேன். என் ஓய்வு, ஒரு யுகத்தின் முடிவு அல்ல. ஒரு யுகத்தின் ஆரம்பம். ஆம், நான் கல்வித் துறையில் கவனம் செலுத்தப்போகிறேன்.  எனக்குப் பிடித்த துறையும் அதுதான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பில் இருந்து ஜாக் மா விலகினாலும், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்வார். நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் ஜாக் மாவின் தலையீடு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கடந்த 3-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டது. அன்றுதான் ஜாக் மா-வின் பிறந்தநாளும்கூட. 54 வயதாகும் ஜாக் மா, மீண்டும் கல்வித் துறைக்கே திரும்புவதற்கு முக்கியக் காரணம், பில் கேட்ஸ். 


 

பில் கேட்ஸ் குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட ஜாக் மா, ‘பில் கேட்ஸ்  கல்வி மேம்பாட்டுக்காக முழு வீச்சில் செயல்பட்டவர். அவரின் உயரத்தை என்றுமே நான் தொட முடியாது. ஆனால், ஒரு விஷயத்தில் அவரைவிட நான் முந்திவிட்டேன். பில் கேட்ஸ் 58 வயதில் ஓய்வு பெற்று, அறக்கட்டளை நிறுவினார். நான் 54 வயதிலேயே ஓய்வுபெற்று அறக்கட்டளை தொடங்கப்போகிறேன். அவரின் வழியில் கல்வி மேம்பாட்டுக்காக என் வாழ்நாளை செலவிடுவேன்’ என்று நெகிழ்ந்தார்.

அமெரிக்கத் தொழிலதிபரும் உலகின் முன்னணி பணக்காரருமான பில் கேட்ஸ், கடந்த 2014 -ம் ஆண்டு, அதாவது அவரின் 58-வது வயதில் மைக்ரோசாஃப்ட் சேர்மேன் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு, பில் மெலிண்டா அறக்கட்டளையைத் தொடங்கி, இல்லாதோர்க்கு உதவிசெய்யத் தொடங்கினார். பில் கேட்ஸின் வழியைப் பின்பற்றி, ஜாக் மா அறக்கட்டளை தொடங்கி நலிந்த மக்களுக்கு  கல்வி சார்ந்த உதவிகளைச் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். வாழ்த்துகள் ஜாக் மா!  



Trending Articles

Sponsored