`இந்தியாவும் சீனாவும் வளர நாங்கள் செலவிடுவதா?' - மானியத்தில் கைவைக்கும் அதிபர் ட்ரம்ப்!இந்தியா, சீனா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு அளித்துவரும் மானியத்தை நிறுத்தப்போவதாக, ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

Sponsored


அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற நாள்முதலே, அமெரிக்கர்களுக்கே முதல் உரிமை என்ற கொள்கையின்படி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார், அதிபர் ட்ரம்ப். அந்த வகையில், இந்தியா, சீனா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு மானியம் உள்ளிட்ட நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தும் என அதிரடி அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். 

Sponsored


வடக்கு டகோட்டா பகுதியில் உள்ள ஃபார்கோ நகரில், நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ரம்ப் ஆவேசமாகப் பேசியுள்ளார். ` சீனா, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துவருகிறது. சீனாவைப் போன்றே இந்தியாவும் பொருளாதாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. இதற்கு, உலக வர்த்தக அமைப்பே காரணம். இந்த இரு நாடுகளுடன் பிற நாடுகளையும் அமைப்பின் பட்டியலில் வைத்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடுகள் அதிகம். ஆனால், அந்த நாடுகளுக்கெல்லாம் உதவாமல், பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி கண்டுவரும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மேலும் வளர்ச்சி அடைய மானியம் வழங்கி உதவிசெய்துவருகிறோம். இதை, நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது.

Sponsored


இந்தியாவும், சீனாவும் நம்மிடம் மானியத்தைப் பெற்றுக்கொண்டு, நாங்களும் வளர்ந்து வரும் நாடுகள் என்றுகூறிக்கொண்டுவருகின்றன. ஆனால், இந்தியா, சீனாவுக்கு வழங்கிவரும் மானியத்தை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதைச் செயல்படுத்த விரும்புகிறேன். மானியத்தை நிறுத்தப்போகிறோம்' என்று கூறிய ட்ரம்ப், `நிறுத்திவிட்டோம்' என அழுத்தமாகக் கூறினார். 

மேலும், வளர்ந்துவரும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை இணைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, அமெரிக்காவும் வளர்ந்து வரும் நாடுதான். பொருளாதாரத்தில் மற்ற வளரும் நாடுகளைவிட வேகமாக வளர்ந்துவருகிறோம். உலக வர்த்தக அமைப்பு மிகவும் மோசமாகச் செயல்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு என்றால் என்ன?. எதற்கான அமைப்பு இது? இதன் நடவடிக்கைகள் என்ன போன்றவை பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. சீனாவை உள்ளே விட்டுவிட்டு, வேடிக்கைபார்க்கிறது உலக வர்த்தக அமைப்பு. 

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தீவிர ரசிகன் நான். அவரைச் சந்திக்கும்போதேல்லாம், நியாயமானவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன். பயங்கரவாதிகளிடம் இருந்து மற்ற நாடுகளைப் பாதுகாக்க நாம் செலவழித்துவருகிறோம். அவர்களுக்காகச் செலவிடும் தொகையை நமக்கு அவர்கள் திருப்பிச்செலுத்த வேண்டும். உலகம் முழுவதையும் நாம் கவனித்துக் கொண்டுவருகிறோம்' என அனல்பரக்கப் பேசியுள்ளார். Trending Articles

Sponsored