‘அவர் சொன்னார் நான் போட்டோஷாப் செய்தேன்’ - புதிய சர்ச்சையில் சிக்கிய அதிபர் ட்ரம்ப்அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் கூட்டத்தை அதிகப்படுத்துவதற்காக அந்தப் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டதாக அரசு புகைப்படக்காரர் தெரிவித்துள்ளார். 

Sponsored


அமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த வருடம் ஜனவரி 20-ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். ஒபாமா அதிபராகப் பதவியேற்ற இரண்டு முறையும் வெள்ளை மாளிகை முன்பு தரை தெரியாத அளவுக்கு மனிதர்களால் நிரம்பி வழிந்தது. ட்ரம்பின் பதவியேற்பில் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால் ட்ரம்ப் பதவியேற்பு விழா புகைப்படத்தில் அதிகம் கூட்டம் இருந்ததாகப் புகைப்படம் வெளியானது. 

Sponsored


இது தொடர்பான விசாரணையில் தற்போது புதிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில மாற்றிவடிவமைக்கபட்டதாக அரசு புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார். ‘புகைப்படத்தில் மக்கள் கூட்டம் இல்லாத பகுதிகள் கத்தரிக்கப்பட்டது. ட்ரம்ப் தனது முதல் நாள் வெள்ளை மாளிகை கூட்டத்துக்கு முன்னாள் இதைச் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே செய்யப்பட்டது. பின்பு அவர் ஒபாமாவை விட தனது பதவியேற்பு விழாவில் அதிக கூட்டம் இருந்ததாக வெளியில் காட்டினார்’ என புகைப்படகலைஞர் கூறியுள்ளார். 

Sponsored


தகவல் அறியும் சுதந்திர சட்டத்தின் கீழ் பிரபல கார்டியன் பத்திரிக்கை இத்தகவலை உறுதிசெய்து தங்களது நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. Trending Articles

Sponsored