”இருக்கு... ஆனா இல்லை!” - ஒன்பதாவது கிரகம் பற்றிய சில உண்மைகள்



முன்பு, நமது சூரியக் குடும்பத்தில் 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், புளூட்டோ சிறிய கோளாகவும் சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறும் நிலையில் இருப்பதாகவும் கருதப்பட்டது. தற்போது, 8 கோள்கள் மட்டுமே சூரியக் குடும்பத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சூரியக் குடும்பத்துக்கு ஒன்பதாவதாக ஒரு கோள் இருப்பதாக சில விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 'தற்போதைய தொலைநோக்கிகளால் அதைக் கண்டறிவது மிகவும் கடினம்.  அதற்குக் காரணம், அது சூரியக் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் இருப்பதே ஆகும்' என்பது அவர்களது வாதம்.

Sponsored


“ஒவ்வொரு முறை நாம் சூரியக் குடும்பத்தைப் புகைப்படம் எடுக்கும்போதும், ஒன்பதாவது கோள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன” என டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வானவியலாளர் சர்கத் மோர் ‘வாஷிங்டன் போஸ்ட்’ எனும் இதழில் குறிப்பிட்டுள்ளார்.

Sponsored


20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஒன்பதாவது கோளுக்கான ஆராய்ச்சியில், இப்போதுதான் அது உண்மையிலேயே இருக்கக்கூடும் என்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒன்பதாவது கோள் இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சூரியக் குடும்பத்தின் எல்லையில் இருக்கும் மிகப்பெரிய கோளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Sponsored


ஒன்பதாவது கோள் இருப்பதற்கான முதல் ஆதாரம், 2014-ம் ஆண்டில் வெளியானது. அதிக பனிக்கட்டிகள் நிறைந்த வான்கோள் ஒன்று சூரியக் குடும்பத்தின் கடைசி நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. “பொருள்கள் ஒரே சுற்றுவட்டப்பாதையில் இருந்தால், ஏதோ ஒன்று உந்தித் தள்ளுகிறது என்று பொருள்” என்று 2014 -ம் ஆண்டில் வான்கோள் கண்டறிந்த நிகழ்வில் உதவி கண்டுபிடிப்பாளராகவும் வாஷிங்டன் கார்னிஜி அறிவியல் நிறுவனத்தில் வானவியலாளராகவும் பணிபுரியும் ஸ்காட் ஷெப்பர்டு தெரிவித்துள்ளார்.

அந்த ஒன்பதாவது கோள், பூமியைவிட 10 மடங்கு பெரிய அளவிலும், நெப்டியூனைவிட 20 மடங்கு தூரத்தில் சூரியனிடமிருந்து தொலைவிலும், சூரியக் குடும்பத்தின் கடைசி மற்றும் அதிகத் தொலைவில் உள்ள கோளாகவும் இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. 

"இருக்கு... ஆனா இல்லை" என்பதா அறிவியல்? சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா.



Trending Articles

Sponsored