`நாம் மீண்டும் சந்திக்க வேண்டும்' - ட்ரம்ப்புக்கு வடகொரிய அதிபர் கடிதம்!மீண்டும் நாம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதியுள்ளார். 

Sponsored


வட கொரியாவில், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்ததன் 70-வது ஆண்டு விழா உலக அளவில் கவனத்தைப் பெற்றது. வருடம்தோறும் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமான ராணுவ அணிவகுப்பை உலக நாடுகள் உற்றுநோக்கினர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அணிவகுப்பில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் இடம்பெறும். ஆனால் இந்த ஆண்டு அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்குப் பதிலாக பிற ஆயுதங்கள் மட்டுமே பிரதானமாக இடம்பெற்றன. 
அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் படி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அணிவகுப்பில் இடம்பெறவைக்கவில்லை. 

Sponsored


வட கொரியாவின் இந்த நடவடிக்கையைப் பாராட்டிய அதிபர் ட்ரம்ப், ``அமைதியையும் பொருளாதார வளர்ச்சியையும் முன்னிறுத்தும் வகையில் வடகொரிய நடவடிக்கை இருந்தது. நன்றி கிம் ஜாங். நம் இருவருக்கும் மத்தியில் மோதல் ஏற்படும் என்று நினைத்த அனைவரின் எண்ணமும் தவறு என்று நாம் இருவரும் இணைந்து நிரூபிப்போம்" எனக் குறிப்பிட்டார். ட்ரம்ப்பின் வாழ்த்துக்குப் பதில் கடிதம் எழுதியுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``அந்தக் கடிதத்தின் முக்கிய நோக்கமாக இருவரும் மீண்டும் சந்தித்து பேச வேண்டும் என கிம் ஜாங் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கான வேலைகளில் இரு நாட்டு அதிகாரிகளும் தொடங்கிவிட்டனர். மேலும் வடகொரியாவில் அணு ஆயுதங்களை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored