இத்தாலியில், ஜாடிக்குள் கிடைத்த புதையல்... சிலிர்க்கவைத்த தங்க நாணயங்கள்!Sponsoredத்தாலியில் காமோ நகரில் கிடைத்த புதையலில் ஏராளமான ரோமர் காலத்து தங்க நாணயங்கள் இருந்தன. 

இந்த நாணயங்கள் 5-வது நூற்றாண்டைச் சேர்ந்தவை. 1870-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Teatro Cressoni நாடகத் தியேட்டர் 1997-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்தத் தியேட்டரை புனரமைத்து கட்டும் பணியில் இத்தாலிய கலாசாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. தியேட்டருக்கு அடியில் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது, ரோமர் காலத்து ஜாடி ஒன்று உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஜாடிக்குள் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்தன. இதைப் பார்த்த தொழிலாளர்கள் சிலிர்த்துப்போனார்கள். உடனடியாக மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். புதையல் கிடைத்ததையடுத்து தற்போது புனரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

Sponsored


Sponsored


தங்க நாணயங்களின் புகைப்படங்களை இத்தாலி கலாசாரத்துறை அமைச்சகம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. இத்தாலி கலாசாரத்துறை அமைச்சர் அல்பெர்ட்டோ பொனிசாலோ, தங்க நாணயங்களின் மதிப்பு, முக்கியத்துவம் குறித்து இன்னும் அறிந்துகொள்ள முடியவில்லை. காமோ நகரம் எங்கள் அகழ்வாராய்ச்சிக்கு முக்கியமான பகுதி ஆகும். எங்கள் அகழ்வாராய்ச்சிக்குக் கிடைத்த மதிப்பு மிகுந்த சொத்து'' என்று குறிப்பிட்டுள்ளார்.

காமோ  நகரம் வடக்கு இத்தாலியில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அழகு மிகுந்த நகரம். இங்குள்ள காமோ மியூஸியம் பிரசித்திபெற்றது. மிலனிலிருந்து ஒரு மணி நேரத்திலும் ரோமிலிருந்து 4 மணி நேரத்திலும் காமோ நகரத்துக்கு ரயிலில் சென்றுவிட முடியும். Trending Articles

Sponsored