உடல்நலக் குறைவால் நவாஸ் ஷெரீஃப் மனைவி மரணம்!Sponsoredபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் மனைவி குல்சூம் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

மூன்று முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீஃப். இவரின் மனைவி குல்சூம் நவாஸ், இவருக்குத் தொண்டை புற்றுநோய் இருப்பதாகக் கடந்த வருடம் உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் அவ்வப்போது லண்டனில் உள்ள ஹார்லி ஸ்ட்ரீட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னையும் இருப்பதாகக் கூறப்பட்டது.

Sponsored


Sponsored


இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் குல்சூமுக்கு மாரடைப்பு ஏற்படவே, அவர் உடனடியாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிலிருந்து அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்துள்ளது. கடந்த இரு தினங்களாக குல்சூமுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சையளிக்கபட்டு வந்தது. இந்தநிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விரைவில் இவரின் உடல் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரின் மகள் ஆகிய இருவரும் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 Trending Articles

Sponsored