`நாம் சிக்கலான தருணத்தில் இருக்கிறோம்' - கேரள வெள்ள தாக்கத்தை விவரிக்கும் ஐ.நா!கேரளா வெள்ளம் காலநிலை மாற்றத்தின் பாதையை மாற்றுவதற்கான அவசியத்தை முன்வைக்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ கடெர்ரெஸ் கூறியுள்ளார்.

Sponsored


கடந்த 5ம் தேதி புதிய காலநிலை பொருளாதாரம் - 2018 என்ற நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ கடெர்ரெஸ், கேரளா மாநில வெள்ளம், கலிபோர்னியாவிலும் கனடாவிலும் ஏற்பட்ட காட்டுத்தீ ஆகியவற்றைக் குறிப்பிட்டு காலநிலை மாற்றம் குறித்து வேதனை தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் கேரள வெள்ளம் குறித்துப் பேசியுள்ளார். ``காலநிலை மாற்றமானது நம்முடைய நேரத்தை வரையறுக்கும் விஷயமாகும். நாம் ஒரு சிக்கலான தருணத்தில் இருக்கின்றோம்.

Sponsored


ஒரு நேரடியான அச்சுறுத்தலை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம். காலநிலை மாற்றம் வேகமாகவே நகர்கிறது. அதன் வேகம் உலகெங்கிலும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கான அறிகுறியாக உள்ளது. காட்டுத்தீ, புயல், வெள்ளம் ஆகியவை பேரழிவை விட்டு செல்கின்றன. கடந்த மாதம் கேரளாவில் ஏற்பட்ட மோசமான மழையினால் 400 க்கும் அதிகமானோர் உயிரை இழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். சமீபத்திய வரலாற்றில் கேரளா சந்தித்துள்ள மோசமான நிகழ்வு ஆகும். கேரள வெள்ளம் காலநிலை மாற்றத்தின் பாதையை மாற்றுவதற்கான அவசியத்தை முன்வைக்கிறது. நாம் நெருக்கடியில் இருக்கின்றோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Sponsored


வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்து வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு எதிராகச் செயல்பட வேண்டிய நேரம் இது. தலைவர்கள் தங்கள் மக்களைக் காக்க காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தவிர்ப்பது, மக்களிடமும், அவர்களைக் காக்க விரும்பும் தலைவர்களிடமும்தான் இருக்கிறது" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். Trending Articles

Sponsored