அச்சுறுத்தும் எல்லை நாடுகளுக்குச் சவால்விடும் ரஷ்யா - 3 லட்சம் வீரர்கள் பங்கேற்கும் `விஸ்டோக் - 2018'ரஷ்ய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதி பிரமாண்டமான போர் ஒத்திகையை ரஷ்யா தொடங்கியுள்ளது. 

Sponsored


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது. இதன் பிறகு ராணுவத்தின் பலத்தை அதிகரித்த ரஷ்யா இதுவரையிலும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் போர் ஒத்திகையை நேற்று தொடங்கியது. சீனா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து ரஷ்யா போர் ஒத்திகை நடத்துகிறது. `விஸ்டோக் -2018' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர் ஒத்திகையில் சுமார் 36,000 ராணுவ வாகனங்கள்,1,000 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள், 80 போர் கப்பல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

Sponsored


Sponsored


ஸாபாட்-81 என்ற போர் ஒத்திகை கடந்த 1981-ம் ஆண்டு நடைபெற்றது. அன்றைய காலகட்டத்தில் பிரமாண்டப் போர் ஒத்திகையாக ஸாபாட்-81 கருதப்பட்டது. ஆனால், தற்போது நடந்து வரும் போர் ஒத்திகையானது, நிஜமான போருக்கு இணையான ஒத்திகை எனக் கூறப்படுகிறது. 

ரஷ்யா எல்லையில், நேட்டோ மூலம் ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் ராணுவப் படையைப் பெருக்கி வருவதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம்சாட்டியது. இந்த நிலையில், `விஸ்டோக் -2018' போர் ஒத்திகை மற்ற நாடுகளுக்குச் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. 5 நாள்கள் நடைபெறும் ஒத்திகையில் சுமார் 3 லட்சம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.Trending Articles

Sponsored