`இது மோசமான புயலாக இருக்கும்'- அமெரிக்காவை மிரட்டும் 'ஃப்ளோரன்ஸ்'!அமெரிக்காவை அதிபயங்கரமான புயல் தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

Sponsored


photo credit: @NOAASatellites

Sponsored


அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள இந்த அதிபயங்கர புயலுக்கு `ஃப்ளோரன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்னும் சில தினங்களில் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 215 கி.மீக்கு அதிகமாகப் புயல் காற்று வீசும் என்றும், கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு மேலாக எழும்பும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கிழக்குப் பகுதியில் உள்ள 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தப் புயலின் சாட்டிலைட் பதிவுகளை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. 

Sponsored


முன்னதாக இந்தப் புயல் குறித்து ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``பல ஆண்டுகள் கழித்து கிழக்குப் பகுதியைப் புயல் தாக்க உள்ளது. இது மோசமான புயலாக இருக்கக்கூடும். மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்" என வேண்டுகோள் விடுத்துள்ளார். Trending Articles

Sponsored