`80 கோடி மக்களுக்கு உணவு இல்லை!' - ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி



Sponsored



உலகளவில் 821 மில்லியன் மக்கள் பசிக் கொடுமையால் வாடுவதாக ஐ.நா அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் உலகளவில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு அதனால் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நேற்று ஐ.நா புதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, `கடந்த வருடம் 821 மில்லியன் மக்கள் பசியின் கொடுமையை அனுபவித்து வந்துள்ளனர். அதாவது 10 பேரில் ஒருவர் உணவு இன்றி தவித்துள்ளனர். 2016-ம் ஆண்டு 815 மில்லியனாக இருந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் கடும் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்" என ஐ.நா எச்சரித்துள்ளது. மேலும், பல ஆண்டுகளாகக் குறைந்திருந்த பசி எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பல மடங்கு அதிகரித்துள்ளது. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில்தான் அதிக ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி போன்ற பிரச்னைகள் நிலவுவதாகவும் ஆசிய நாடுகளில் இது கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2010-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் 181 மில்லியனாக இருந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டு 222 மில்லியனாகவும், 2017-ம் ஆண்டு 236 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. 

Sponsored


பருவநிலை மாற்றம், மழை அளவு குறைதல், விவசாயப் பருவங்கள் மாறுபடுவது, அதிகப்படியான வெள்ளம் மற்றும் அதிகப்படியான வறட்சி போன்ற இயற்கைக்கு முரணான காரணிகளே பட்டினிகள் அதிகரிக்கக் காரணம். பருவநிலை மாற்றங்களால் மிக முக்கிய உணவுப்பொருள்களான அரிசி, கோதுமை,சோளம் போன்றவற்றின் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால் உணவுத் தயாரிப்புகள் குறைந்து உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பதால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களால் உணவு வாங்கமுடியாமல் பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா விளக்கியுள்ளது. ஐ.நாவின் இந்த அறிக்கை உலக நாடுகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored




Trending Articles

Sponsored