வாரிசு: பெண்களுக்கு பிரத்யேக FDFS - விசில், ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடிய கேரள விஜய் ரசிகைகள்!

குருபிரசாத் & தி.விஜய்
வாரிசு பெண்கள் காட்சி
வாரிசு பெண்கள் காட்சி
அரசியல்

`வாரிசு' மற்றும் `துணிவு' படங்கள் நேற்று வெளியாகின. தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தப் படங்கள் வெளியான பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர். முக்கியமாக கேரள மாநிலத்தில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்.

வாரிசு

விஜய் படங்களுக்கு கேரளாவில் எப்போதும் வரவேற்பு தடபுடலாக இருக்கும். அந்த வகையில், இந்த முறை வாரிசு ரிலீஸுக்கு அங்கு சிறப்பான ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்களுக்காக வாரிசு படத்தின் பிரத்யேக முதல்நாள் முதல் காட்சி நேற்று திரையிடப்பட... தமிழ்நாடே ஆச்சர்யமாக அந்தத் திரையரங்கை திருப்பிப் பார்த்திருக்கிறது.

பாலக்காடு மாவட்டம், அரோமா தியேட்டரில் திரையிடப்பட்ட அந்தக் காட்சியை பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு கொண்டாடினர். இது குறித்து அந்த ஃபேன் கேர்ள்ஸ், ``விஜய் அண்ணாவோட தீவிர ரசிகர்கள் நாங்க. எந்தப் படமா இருந்தாலும் முதல்நாள் முதல்காட்சி பார்த்துடுவோம்.

வாரிசு பெண்கள் காட்சி

ஆனா, பொதுவா அங்க ஆண்கள் அதிகமா இருப்பாங்க என்பதால, அண்ணனை திரைல பார்க்கறப்ப எங்களோட முழு உற்சாகத்தை அங்க கொண்டாட முடியாது. அந்தக் குறைய போக்குற விதமா வாரிசு படத்தை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு இந்த முறை ரசிச்சோம்” என்றனர்.

Advertising
Advertising

இந்த ஏற்பாட்டை செய்தவர்கள், விஜய்யின் ரசிகர்கள். அவர்கள் வாவ் முயற்சி பற்றி கூறியபோது, ``கேரளாவில் மலையாள நடிகர்களுக்கே இல்லாத மிகப்பெரிய ஓப்பனிங் தமிழ் நடிகரான விஜய்க்கு எப்போதும் கிடைக்கும்.

வாரிசு பெண்கள் காட்சி

முதல் நாளே பெண்களும் அதிகளவு வருவாங்க. நம்மள மாதிரிதானே அவங்களுக்கும் ஆசை இருக்கும். அதனால தான் எந்தத் தொந்தரவும் இல்லாம அவங்க பாதுகாப்பா, வாரிசு பட வெளியீட்டை கொண்டாட இந்த  ஏற்பாட்டை செஞ்சோம்” என்றனர்.

ஆம்... Why should boys have all the fun?!

SCROLL FOR NEXT