குருசாமி... குத்தூசி குருசாமியான கதை! | The Legend

Mouriesh SK
குத்தூசி குருசாமி
குத்தூசி குருசாமி
பல்சுவை

ஒடுக்கப்பட்டவர்களுக்கான சுதந்திரமே உண்மையான சுதந்திரம் என்று திராவிட நாடு கோரிக்கையை அப்போது முன்வைத்தது திராவிடர் கழகம். இதனால் சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அமைச்சரவையில் பணி சேர்ந்த அண்ணல் அம்பேத்கரை விமர்சித்தது குடியரசு இதழ். இந்து சட்டத்தொகுப்பு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் அரசிலுள்ள பழைமைவாதிகள் தடைவிதிக்கவே தன் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் அம்பேத்கர். அப்போது அதைப் பாராட்டி அவரின் பதவி விலகல் உரையை முழுமையாக வெளியிட்டு குத்தூசி குருசாமி எழுதிய கட்டுரை ஒன்று அவரின் மிக முக்கியமாக பதிவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் அம்பேத்கரின் நிலைப்பாட்டை மீண்டும் விமர்சித்து எழுதினார் அவர் .

ஒரு நெறிப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத்தை முதன்முதலில் செய்துகொண்டவர் குத்தூசி குருசாமி. சைவத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த அவர் தேவதாசி சமூகத்தை சேர்ந்த குஞ்சிதத்தைத் திருமணம் செய்துக்கொண்டார்.

தீவிர சைவ பக்தரில் இருந்து காந்தியத்திற்கு மாறியது, பின்னர் பெரியாரியத்தைப் பின்பற்றியது முதல் சாதி மற்றும் கடவுள் மறுப்பு, சுயமரியாதை, பொதுவுடைமை, ஆணாதிக்கை எதிர்ப்பு, திராவிடம் என பல்வேறு சித்தாந்தங்களுக்காக பணியாற்றிய குத்தூசி குருசாமியை பற்றி முழுமையாக அறிய முழு வீடியோ இதோ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on Vikatan APP
Start Quiz
Advertising
Advertising
SCROLL FOR NEXT